மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான ரேங்க் பட்டியல் வெளியீடு
மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான ரேங்க் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.
சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் இந்த பட்டியலை வெளியிட்டார்.
நீட் தேர்வு அடிப்படையில் வெளியிடப்பட்ட தரவரிசைப்பட்டியலில், ஓசூர் மாணவர் சந்தோஷ் முதலிடம் பெற்றுள்ளார்.
நீட் தேர்வில் 656 மதிப்பெண்களை சந்தோஷ் பெற்றுள்ளார்.
2-வது இடத்தை கோவை முகேஷ் கண்ணாவும்(655 மதிப்பெண்கள்), 3-வது இடத்தை திருச்சியை சேர்ந்த சையது ஹபீசும்(651 மதிப்பெண்கள்) பிடித்துள்ளனர்.
13-வது இடத்தை பிடித்த ஆன்ஸ்டன் ஜெரார்ட் ஏஞ்சலோ கேரளாவைச்சேர்ந்தவர் ஆவார்.
மருத்துவ படிப்பில் 27,212 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளதாகவும் மாநில பாடத்திட்டத்தில் படித்து விண்ணப்பித்தவர்கள் 27,488 மாணவர்களும் சிபிஎஸ்இ மாணவர்கள் 3418 மாணவர்களும் ஆவர் என்று சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மேலும் ,மருத்துவக்கலந்தாய்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும், மருத்துவ கலந்தாய்வு எந்த இடையூறும் இல்லாமல் நடக்கும் என்று தெரிவித்த ராதாகிருஷ்ணன் கவுன்சிலிங் நாளை நடைபெறுவதால் மாணவர்களுக்கு தொலைபேசியில் அழைப்பு விடுக்கப்படும்.
அழைப்பாணை விவரத்தில் சந்தேகம் இருந்தால் நேரடியாக வரவேண்டும் என்றும் தரவரிசைப்பட்டியலின் விவரம் குறுந்தகவலில் அனுப்படும் எனவும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment