பிளஸ் 2 துணைத்தேர்வு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்
செப்டம்பர், அக்டோபரில் நடக்க உள்ள பிளஸ் 2 துணைத் தேர்வுக்கு தனித்தேர்வர்கள் நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு
2017, செப்டம்பர், அக்டோபரில் நடக்க உள்ள பிளஸ் 2 துணைத்தேர்வுக்கு, தனித்தேர்வர்கள் நாளை(ஆக.24) முதல் 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
கல்வி மாவட்டவாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசு தேர்வுத்துறை சேவை மையங்களில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
சேவை மைய விபரங்கள் மற்றும் கூடுதல் விபரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளம் மற்றும் அனைத்து முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம், அரசு தேர்வுகள் மண்டல துணை இயக்குநர் அலுவலங்களில் அறிந்து கொள்ளலாம்.
நேரடி தனித்தேர்வர்கள் தேர்வுக்கட்டணம் ரூ.187, ஆன்லைன் பதிவுக்கட்டணம் ரூ.50 செலுத்த வேண்டும். மறுமுறை தேர்வு எழுதும் தனித்தேர்வர்கள் ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.50, இதர கட்டணம் ரூ.35, ஆன்லைன் பதிவுக்கட்டணம் ரூ.50 செலுத்த வேண்டும்.
பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்வுக்கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்த பின் வழங்கப்படும் ஒப்புகை சீட்டில் உள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தியே, பின்னர் அறிவிக்கப்படும் தேதியில் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய முடியும். எனவே இச்சீட்டை பாதுகாப்பாக வைத்திருத்தல் வேண்டும்.
தனித்தேர்வர்கள் அவர்கள் விண்ணப்பிக்கும் கல்வி மாவட்டத்திலேயே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். விண்ணப்பிக்கும்போது தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். தபால் மூலம் அனுப்பப்படும் விண்ணப்பம் ஏற்கப்பட மாட்டாது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment