கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Wednesday, August 23, 2017

அசல் லைசென்ஸை இனி தேடுங்க

"செப்., 1 முதல் அசல் டிரைவிங் லைசென்ஸ் அவசியம்

வரும் செப்டம்பர் 1 முதல் வாகன ஓட்டிகள் அசல் டிரைவிங் லைசென்ஸ் வைத்திருப்பது அவசியம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து போக்குவரத்து அமைச்சர் விஜயபாஸ்கர் அளித்த பேட்டி:

விதிமீறல் தொடர்பாக 9,500 லைசென்சுகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளன. மது அருந்தி வாகனம் ஓட்டியவர்கள், சாலை விதிகளை மீறியவர்கள், அதிக பாரம் ஏற்றி சென்றவர்கள் லைசென்சுகள் அதிகளவில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளன.

வரும் செப்டம்பர் 1 முதல் அசல் டிரைவிங் லைசென்ஸ் ஓட்டுநர்கள் வைத்திருக்க வேண்டும். இதன் மூலம் சாலைவிபத்துகள் குறையும். வாகன விபத்துகளை குறைக்கவும், உயிரிழப்புகளை தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தேசிய அளவில் தமிழகத்தில் தான் சிறந்த சாலைகள் உள்ளன. மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் நெடுஞ்சாலைகள் சிறந்ததாக உள்ளன. சிறந்த சாலைகள் இருப்பதால் தான் அதிக விபத்துகள் நிகழ்கின்றன.

போக்குவரத்து அமைச்சகத்தின் நடவடிக்கை மூலம் 3,240 விபத்துகள், 309 உயிரிழப்புகள் தடுக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் சென்னையில் பேட்டரி மூலம் ஓடும் பஸ்கள் இயங்கும். இவ்வாறு அவர் கூறினார்."

No comments:

Post a Comment