கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வருகைக்கு வணக்கம் @ அன்னையர் தினம் நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Thursday, August 10, 2017

இப்படியும் அர்த்தம் உண்டோ ?

1 .மனைவியிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டால் அது "யோகா". மனைவி திட்டுவதை காதில் வாங்கி கொள்ளாவிட்டால் அது "தியானம்".

யோகாவும் தியானமும் நம் வாழ்க்கைக்கு ரொம்ப முக்கியம் மக்களே... 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗

🤗2. தோளுக்கு மேல வளர்ந்தாச்சு ! இனி இவனை அடிக்க முடியாதுன்னு பெத்தவங்க மகனை அடிக்க இன்னோருத்தியை ஏற்பாடு பண்றதுதான்

திருமணம்  

3. மாப்பிள்ளை வீட்டில் மாப்பிள்ளைக்கு ஒரு தங்கை உண்டு என்று சொன்னவுடனே, பெண்ணுக்கு லேசா கொஞ்சம் முகம் வாடும். ஆனால், பெண் வீட்டில் பெண்ணுக்கு ஒரு தங்கை உண்டு என்று சொன்னவுடனே மாப்பிள்ளைக்கு ஒரு சந்தோஷம் முகத்தில் பிரகாசிக்கும் பாருங்கள்!

ஆண்களுக்கு எப்பவுமே பரந்த மனசுங்க.

உங்கள் கணவரை நேசியுங்கள்!

* அடிக்கடி டீயோ, காபியோ கேக்குறார் என்றால் உங்கள் நிறுத்தாத பேச்சை புத்துணர்ச்சியுடன் கேட்க விருப்புகிறார் என்று அர்த்தம். .

* மற்ற அழகான பெண்களை பார்க்கிறாரா? .

என் பொண்டாட்டிய விட அவ என்ன அழகான்னு செக் பண்றார்னு அர்த்தம். .

* உங்கள் சமையலை குறை கூறிக்கொண்டே இருக்கிறாரா?

அவரது சுவையறியும் திறன் கூடிக்கொண்டே போகிறது என்று அர்த்தம். .

* இரவில் குறைட்டை விட்டு உங்கள் தூக்கத்தை கெடுக்குறாரா? .

உங்களை மணந்தபின் தான் நிம்மதியாக உறங்குகிறார் என்று அர்த்தம். .

* உங்கள் பிறந்தநாளுக்கு பரிசு வாங்கி தரவில்லையா?

உங்கள் எதிர்காலத்துக்கு பணம் சேமித்து வைக்கிறார் என்று அர்த்தம். .

* நேசித்தே ஆகவேண்டும் உங்களுக்கு வேற வழியும் இல்லை. .

ஏனென்றால்......... . கணவனை கொல்வது சட்டப்படி குற்றம்