கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Wednesday, August 9, 2017

நம் பான் அட்டை நிலவரம் என்ன ?

நமது பான் அட்டையின் நிலை தெரிய வேண்டுமா?

மத்திய அரசு சுமார் 11 லட்சம் பான் அட்டைகளை முடக்கியுள்ளது. இதுகுறித்த தகவல்களை நிதித்துறைக்கான மத்திய இணை அமைச்சர்சந்தோஷ் குமார் காங்வார் வெளியிட்டுள்ளார்.

ஒரு நபரின் பெயரிலேயே பல  பான் அட்டைகள் வழங்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவற்றை மத்திய அரசு முடக்கியுள்ளது. இதுகுறித்து ராஜ்யசபாவில் எழுத்துபூர்வமாக பதிலளித்த மத்திய நிதித்துறை இணையமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார்,

"பான் கார்டு என்பது வரி விதிப்பில் மிக முக்கியமான ஒன்றாகவும், ஒரு நபர் மேற்கொள்ளும் அனைத்து நிதி பரிவர்த்தனைகளை ஒருங்கிணைப்பதாகவும் உள்ளது. ஒரு நபருக்கு ஒரு பான் கார்டு ஒதுக்கீடு என்பது வழிகாட்டி கொள்கை. ஆனால், ஒரே நபருக்கு ஏராளமான பான் கார்டுகள் ஒதுக்கப்பட்டிருந்தன. ஜூலை 27-ம் தேதி கணக்கீட்டின் படி, உயிருடன் இல்லாத நபர்அல்லது பொய்யான அடையாளம்கொண்டவர்களின் பெயர்களில் 1,566 பேருக்குப் போலி பான் கார்டுகள் ஒதுக்கப்பட்டிருந்தன. அவை அடையாளம் காணப்பட்டு நீக்கப்பட்டுள்ளன.

இதுபோல, ஒட்டுமொத்தமாக 11,44,211 பான் கார்டுகள் அடையாளம் காணப்பட்டு நீக்கப்பட்டுள்ளன" என்றார். மேலும், உங்கள் ஆதார் அட்டை செயல்பாட்டில்தான் உள்ளதா என்பதை அறிந்துகொள்ள மத்திய அரசு வசதி செய்துள்ளது.

உங்கள் ஆதார் அட்டை குறித்து அறிந்துகொள்ள, முதலில், https://incometaxindiaefiling.gov.in/e-Filing/Services/KnowYourPanLinkGS.html என்ற Link-ஐ Click செய்யுங்கள்.

அடுத்ததாகத்திறக்கும் வலைப்பக்கத்தில் கேட்கப்பட்டிருக்கும் தகவல்களைத்(உங்கள் பெயர், துணைப்பெயர், பிறந்த தேதி, மொபைல் எண் ஆகியவற்றை) தகுந்த இடங்களில் நிரப்பவும்.

இதன்பின்னர் உங்களுக்குக் கிடைக்கும் ஓ.டி.பி-யை பதிவு செய்தால், உங்களின் பான் அட்டை குறித்த அத்தனை நிலவரங்களும் உங்களுக்குக் கிடைக்கும்.

No comments:

Post a Comment