கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Sunday, August 20, 2017

அதிக ஆயுள் தருமாம் அசைவ உணவுகள்

"சைவ உணவு உண்பவர்களைவிட, அசைவ உணவு உண்பவர்களின் உயிரணுக்கள் திறன் வாய்ந்ததாம் – ஆய்வு சொல்லுது

சைவ உணவுப் பழக்கம் உடையவர்களைவிட அசைவ உணவுப் பழக்கம் உடையவர்களுக்கு உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக அமெரிக்க ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின், லோமா லிண்டா மருத்துவப் பல்கலையைச் சேர்ந்த ஆய்வாளர்கள், சைவ மற்றும் அசைவ உணவுப் பழக்கம் உடையவர்களின் உயிரணுக்கள் பற்றிய ஆய்வில் ஈடுபட்டனர்.

இதற்காக, கலிபோர்னியாவை சேர்ந்த, சைவ மற்றும் அசைவ உணவுப் பழக்கம் உடைய சிலரின் உயிரணுக்களில் சோதனை மேற்கொண்டு, அதன் அடிப்படையில் தங்கள் ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

ஆய்வறிக்கையில், “அசைவ உணவு உண்பவர்களை விட, காய்கறிகள், பழங்கள் போன்ற இயற்கை உணவுப் பொருட்களை உண்பவர்கள் அதிக நாட்கள் உயிர் வாழ்கின்றனர்.

இயற்கையில் கிடைக்கும் பொருட்களை உண்பதால், இவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. இளமையும் அதிக நாட்களுக்கு நீடிப்பதால், அவர்களால் அதிக காலம் உயிர் வாழ முடிகிறது.

எனினும், அசைவ உணவு உண்பவர்களின் உயிரணுக்களை விட, சைவ உணவு உண்பவர்களின் உயிரணுக்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.

சைவ உண்வு உண்பவர்களின் உயிரணுக்களில், திறன் மிக்கவையும் மிகக் குறைவாகவே உள்ளன” என்று அந்த ஆய்வறிக்கையில் கூறியுள்ளனர்"

No comments:

Post a Comment