இறப்பு சான்றிதழ் பெற அக்டோபர் 1 முதல் ஆதார் எண் கட்டாயம் -மத்திய அரசு
இறப்பை பதிவு செய்ய அக்டோபர் 1ம் தேதி முதல் ஆதார் கட்டாயமாகிறது என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
மத்திய அரசு ஆதார் எண்ணை அனைத்து விஷயங்களுக்கு கட்டாயமாக்கி வருகிறது. அந்த வகையில், அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் இறப்பை பதிவு செய்ய ஆதார்எண் அவசியம் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், ஆதார் வைத்திருந்தால் மட்டுமே ஒருவர் இறப்பை பதிவு செய்ய முடியும் என்றும்ஆதார் எண் இல்லாதவர்களின் இறப்பை பதிவு செய்ய முடியாது என்றும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment