கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Monday, January 22, 2018

இனி 7- ஆம் வகுப்பு வரை மட்டுமே ஆல்பாஸ்

தமிழகத்தில் 7-ம் வகுப்பு வரை மட்டுமே இனி கட்டாய தேர்ச்சி: பள்ளி கல்வித்துறை

தமிழகத்தில் வரும் கல்வியாண்டு முதல் 7-ம் வகுப்பு வரை மட்டுமே மாணவர்கள் கட்டாய தேர்ச்சி செய்யப்படுவார்கள் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இலவச மட்டும் கட்டாய கல்வி சட்டத்தில் கீழ், 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களை தோல்வி அடைய செய்யக்கூடாது என்றும் அனைவருக்கும் கட்டாய தேர்ச்சி வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மாணவர்கள் அந்தந்த வகுப்புக்குறிய திறன்களை பெறவில்லை என்பது குற்றசாட்டாக எழுந்தது. இதனால் 5-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்புக்கு தேர்வு நடத்த வேண்டும் என்ற முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது.

இதற்காக இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தில் வரயிருக்கும் பட்ஜெட் கூட்டத் தொடரில் திருத்தம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட உள்ளது. மேலும் மத்திய அரசின் இந்த முடிவை அமல்படுத்துவது அந்தந்த மாநிலங்களின் விருப்பம் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஏற்கனவே செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மத்திய அரசு இச்சட்டத்தை கொண்டு வந்தால் எதை அமல்படுத்துவது என்பது குறித்து தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் கடந்த சில தினங்களுக்கு முன் ஆய்வு கூட்டம் நடந்தது. இதில் 5-ம் வகுப்புக்கு கட்டாய தேர்ச்சி தொடர்ந்து நடைமுறையில் இருக்கட்டும் என்றும், 8-ம் வகுப்புக்கு தேர்வு நடத்தலாம் என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆகவே வரும் கல்வி ஆண்டில் இது தொடர்பாக தமிழக அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டு, 8-ம் வகுப்புக்கு தேர்வு என்ற நடைமுறையை அமல்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளது.

No comments:

Post a Comment