கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Sunday, January 28, 2018

இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்

இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்

தமிழகத்தில், 43 ஆயிரம் இடங்களில், இன்று, போலியோ சொட்டு மருந்து முகாம் நடக்கிறது. மொத்தம், 76 லட்சம் குழந்தைகளுக்கு, சொட்டு மருந்து கொடுக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
தமிழகம், 14 ஆண்டுகளாக, போலியோ பாதிப்பு இல்லாத மாநிலமாக உள்ளது. இதே நிலையை தக்க வைக்கவும், போலியோ பாதிப்பு ஏற்படாதிருக்கவும், ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, சொட்டு மருந்து கொடுக்கும் முகாம், தமிழகம் முழுவதும், 43 ஆயிரத்து, 51 மையங்களில், இன்று நடக்கிறது.
வழங்குமிடங்கள்
அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள், பஸ் நிறுத்தங்கள், திரையரங்குகள், வணிக வளாகங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் போன்ற, மக்கள் அதிகம் கூடும் இடங்களில், இந்த முகாம் நடைபெறும்.
இதில், சுகாதார ஊழியர்கள், உள்ளாட்சி பணியாளர்கள், தன்னார்வலர்கள் என, இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஈடுபடுகின்றனர்.பொது சுகாதாரத் துறை இயக்குனர், குழந்தைசாமி கூறியதாவது:தமிழகம் முழுவதும், 76 லட்சம் குழந்தைகளுக்கு, போலியோ சொட்டு மருந்து கொடுக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
முதற்கட்ட முகாம், இன்று நடக்கிறது. தவறாமல், ஐந்து வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும், பெற்றோர், சொட்டு மருந்து கொடுக்க வேண்டும். இரண்டாம் கட்ட முகாம், மார்ச்,11ல் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment