பிளஸ்-1 தனித் தேர்வர்களுக்கு அனுமதிச் சீட்டு தயார்: வரும் 13 முதல் பதிவிறக்கலாம்
பிளஸ்-1 பொதுத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள நேரடித் தனித் தேர்வர்கள் வரும் 13-ஆம் தேதி முதல் (செவ்வாய்க்கிழமை) தேர்வறை அனுமதிச் சீட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்குநர் அலுவலகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பு:
மார்ச்-ஏப்ரல் 2018 மேல்நிலை முதலாமாண்டு (பிளஸ்-1) பொதுத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள நேரடித் தனித் தேர்வர்கள் (தத்கல் உள்பட), அவர்களுக்கான தேர்வறை அனுமதிச் சீட்டை வருகிற 13 ஆம் தேதி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தேர்வுக் கால அட்டவணையும் இந்த இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. அவ்வாறு பதிவிறக்கம் செய்யும்போது விண்ணப்ப எண், பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும். அனுமதிச் சீட்டு இல்லாமல் தேர்வறைக்குள் தேர்வர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment