கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Saturday, February 10, 2018

விரிவுரையாளர் தேர்வு ரத்துஅ

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ரத்து

பாலிடெக்னிக் விரிவுரையாளர் நியமனத் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, அந்தத் தேர்வை ரத்து செய்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெள்ளிக்கிழமை வெளியிட அறிவிப்பு:

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அரசு தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர்கள் நேரடி நியமன எழுத்துத் தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் 16-இல் நடத்தப்பட்டது. இந்தத் தேர்வு ரத்து செய்யப்படுகிறது. மறு தேர்வுக்கான அறிவிக்கை வரும் மே மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்பட்டு, ஆகஸ்ட் முதல் வாரத்தில் தேர்வு நடத்தப்படும்.

தேர்வுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய தேதி மற்றும் தேர்வுக்கான தேதி ஆகியன ஆசிரியர் தேர்வு வாரியத்தால் விரைவில் அறிவிக்கப்படும். கடந்த முறை விண்ணப்பித்தவர்கள் மீண்டும் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும். ஆனால், கடந்த முறை விண்ணப்பக் கட்டணம் செலுத்தியவர்கள் இந்த முறை செலுத்தத் தேவையில்லை.

புதிய விண்ணப்பதாரர்களும் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

கைது-விசாரணை

கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் எழுந்ததாக புகார்கள் கூறப்பட்டன. இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் குறைந்த மதிப்பெண் எடுத்திருந்தோருக்கு, மதிப்பெண் பட்டியலில் அதிக மதிப்பெண்கள் அளிக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இந்த விவகாரத்தில் இடைத்தரகர்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் கைது செய்யப்பட்டனர்.

இதையடுத்து விரிவுரையாளர் தேர்வினை தமிழக அரசு இப்போது ரத்து செய்துள்ளது.

No comments:

Post a Comment