பஞ்சசீலம் :
பிற நாட்டின் ஒற்றுமையை மதிக்க வேண்டும்.
பிற நாட்டைத் தாக்கக் கூடாது.
பிற நாட்டின் உள் விவகாரங்களில் தலையிடக் கூடாது.
பிற நாடுகளுடன் நல்லுறவு கொண்டிருக்க வேண்டும்.
பிற நாடுகளுடன் அமைதியான முறையில் இணங்கி இருத்தல் வேண்டும் .
அணிசேராக் கொள்கை :
இரண்டாம் உலகப் போருக்குப் பின் உலகம் இரண்டு அணிகளாகப் பிரிந்தது.
அமெரிக்கா தலைமையில் ஓர் அணி , ரஷ்யா தலைமையில் ஓர் அணி இந்தியா இரண்டு அணிகளிலும் சேராமல் நடுநிலைமை வகிக்கிறது.
இதற்கு அணி சேராக் கொள்கை என்று பெயர். இதன் மூலம் இந்தியா உலகில் அமைதியை நிலை நாட்டி வருகிறது.
2. ஜனநாயகத்தில் எதிர்க்கட்சியின் பங்குகள் பற்றி விவரி?
மக்களாட்சியின் வெற்றி எதிர்க்கட்சிகளின் செயல்பாட்டை ஒட்டி அமைகிறது.
ஆளுங்கட்சிக்கு அடுத்தபடியாக அதிக இடங்களைப் பெறும் கட்சி எதிர்க் கட்சியாகும்.
எதிர்க்கட்சித் தலைவர் ஆளுங்கட்சி அமைச்சருக்கு சமமான அதிகாரமுடையவர். ஆளுங்கட்சியின் செயல்பாடுகளை கண்காணித்து குறை , நிறைகளை வெளிப்படுத்துவது இவர்களுடைய வேலை ஆகும்.
ஆளுங்கட்சியினரை விமர்சிப்பதால், அதிகாரங்களை தவறாக பயன்படுத்துவதற்கு எதிர்கட்சிகள் தடையாக உள்ளன.
No comments:
Post a Comment