கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Friday, March 2, 2018

மனதை கவர்ந்த அழகான வரிகள்

அழகான வரிகள்

தெரிந்து மிதித்தாலும் தெரியாமல் மிதித்தாலும் மிதிபட்ட எறும்பிற்கு இரண்டுமே ஒன்றுதான்.

நினைப்பது போல் வாழ்க்கை எல்லோருக்கும் அமைந்து விடுவதில்லை அழகாய் அமைந்த வாழ்க்கையைக் கூட சிலருக்கு வாழத் தெரிவதும் இல்லை..!

'சந்தோஷமா வாழறேன்' னு காட்டிக்கொள்ள தான் பணம் தேவைப்படுகிறது உண்மையில், சந்தோஷமா வாழ பணம் ஒரு பொருட்டே இல்லை .

நோய் வரும் வரை உண்பவன், உடல் நலமாகும் வரை உண்ணாதிருக்க வேண்டி வரும்!

பணம் சம்பாதிப்பது குண்டூசியால் பள்ளம் தோண்டுவது போல ஆனால் செலவழிப்பது குண்டூசியால் பலூனை உடைப்பது போல..!

பணத்தின் மதிப்பு தெரியவேண்டுமா? செலவு செய்யுங்க.....! உங்களின் மதிப்பு தெரியவேண்டுமா?.. கடன் கேளுங்க.!

பிச்சை போடுவது கூட சுயநலமே... புண்ணியம் கிடைக்கும் என்று நினைத்தால்...

அனுபவத்தால் உணரவேண்டிய ஒன்றை ஆயிரம் தத்துவ ஞானிகளாலும் உணரவைக்க முடியாது.

வாழ்க்கையில் கற்றுக்கொள்வதில் குழந்தை போல் இரு அதற்கு அவமானம் தெரியாது விழுந்தவுடன் அழுது முடித்து திரும்பவும் எழுந்து நடக்கும்..!

வெட்டாதீர்கள் - மழை தருவேன் என்கிறது "மரம்". வெட்டுங்கள் - மழை நீரைசேமிப்பேன் என்கிறது "குளம்"

திருமணம் - ஒரு ஆண் நல்ல கடந்தகாலம் கொண்ட பெண்ணையும் ஒரு பெண் நல்ல எதிர்காலம் கொண்ட ஆணையும் தேடுவது.!!

முன்னே செல்பவனை விட்டுவிடுங்கள் பின்னால் வருபவனிடம் மட்டும் கொஞ்சம் எச்சரிக்கையாய் இருங்கள் அவனால்தான் உங்களை முந்திச்செல்ல முடியும்.

மீண்டும் ஒரு முறை முகம் பார்த்து பேசவேண்டியிருக்கும் என்ற ஒரு காரணத்திற்காகவே நம்முடைய பல கோபங்கள் தற்கொலை செய்துகொள்கின்றன

நேர்மையாக சம்பாதித்த பணம் பெரும்பாலும் கோயில் உண்டியல்களுக்கு வருவதில்லை.

இவ்வுலகில் வாழ கற்றுக் கொண்டதை விட வலிகளை மறைத்து சிரிக்க கற்றுக் கொண்டதே அதிகம்..............!

பகலில் தூக்கம் வந்தால், உடம்பு பலவீனமா இருக்குனு அர்த்தம்..!! இரவு தூக்கம் வரலைனா மனசு பலவீனமா இருக்குனு அர்த்தம்...........!

துரோகிகளிடம் 'கோபம்' இருக்காது கோபப்படுபவர்களிடம் 'துரோகம்' நிச்சயமாக இருக்காது..

தன்னை நல்லவராக காட்டிக் கொள்ள அடுத்தவரை கெட்டவராகச் சித்தரிக்கும் எவரும் நீண்ட நாள் நல்லவர் வேடத்தில் சுற்ற முடியாது

#அழகான வரிகள் பிடித்திருந்தால் பகிரவும்...

No comments:

Post a Comment