அக்டோபர் 6, 7 தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு : ஆசிரியர் தேர்வாணையம் அறிவிப்பு
ஆசிரியர் தகுதி தேர்வு வரும் அக்டோபர் 6 மற்றும் 7 தேதிகளில் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தேர்வு தொடர்பான கால அட்டவணையை ஆசிரியர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் மற்றும் இரண்டாம் தாள் என இரு தேர்வுகளாக நடத்தப்படுகிறது.
அக்டோபர் 6-ம் தேதி முதல் தாளும், 7-ம் தேதி இரண்டாம் தாள் தேர்வும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் தகுதி தேர்வுக்கு ஜூலை முதல் வாரத்தில் இருந்து விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல ரத்து செய்யப்பட்ட பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ஆகஸ்ட் 4-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டது என கூறப்பட்டுள்ளது.
57 தொடக்க கல்வி ஆசிரியர் பணிக்கு செப்டம்பர் 18-ம் தேதி தேர்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 25 வேளாண்மை பயிற்றுநர் பணியிடங்களுக்கான தேர்வு ஜூலை 14 -ம் தேதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு கலைக்கல்லூரி உதவி பேராசிரியர் தேர்வு மே முதல் வாரத்தில் நடைபெற உள்ளது ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகள் நவம்பர் மாதம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆயிரத்து 883 உதவி ஆசிரியர்களுக்கான பணியிடங்களுக்கு ஜீன் 2 வாரத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடைபெறும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment