கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Wednesday, March 21, 2018

இனி வீடு தேடி வரும் பெட்ரோல் டீசல்

வீடு தேடி வருகிறது பெட்ரோல், டீசல்: சேவையைத் தொடங்கியது இந்தியன் ஆயில் நிறுவனம்

காய்கறி, மளிகை சாமான்கள் மட்டுமே ஆர்டர் செய்தால் வீடு தேடிவந்தநிலை மாறி, இப்போது வாகனங்களுக்கு தேவையான பெட்ரோல், டீசலும் ஹோம் டெலிவரி செய்யும் நிலை வந்துவிட்டது.
இந்தியன் ஆயில் நிறுவனம் டீசல் மட்டும் ஹோம் டெலிவரி திட்டத்தை மஹாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் தொடங்கி இருக்கிறது.
கடந்த ஏப்ரல் மாதம் எரிபொருள் ஹோம் டெலிவரி குறித்து பேசிய மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், வாடிக்கையாளர்களுக்கு பெட்ரோல், டீசலை டோர்டெலிவரி செய்யும் திட்டத்தை செயல்படுத்த ஆலோசித்து வருகிறோம்.

இதன் மூலம் நீண்ட வரிசையில் பெட்ரோல் நிலையங்களில் வாகன ஓட்டிகள் காத்திருப்பது தடுக்கப்படும் என்று தெரிவித்து இருந்தார். அதன்படி, இப்போது முதல்முறையாக இந்தியன் ஆயில் நிறுவனம் டீசல் மட்டும் டோர்டெலிவரி செய்யும் திட்டத்தை தொடங்கி இருக்கிறது.
இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு பெட்ரோலிய, வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பு(பிஇஎஸ்ஓ) முதல்முறையாக சான்றிதழ் அளித்துள்ளது. இதற்கு முன் கடந்த ஆண்டு ஜூன் பெங்களூரில் இதேபோன்ற பெட்ரோல், டீசல் டோர்டெலிவரி செய்யும் திட்டத்தை ஏஎன்பி நிறுவனம் தொடங்கியது. ஆனால், டோர்டெலிவரி செய்வதற்கு பாதுகாப்பு சான்றிதல் இல்லை எனக் கூறி பெட்ரோலியம், வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பு உரிமத்தை ரத்து செய்தது.
இந்நிலையில் முதல் முறையாக இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு முறைப்படி சான்றிதழ் வழங்கியுள்ளத குறிப்பிடத்தக்குது. இது குறித்து இந்தியன் ஆயில் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் சஞ்சீவ் சிங் கூறுகையில், வாடிக்கையாளர்களின் வீட்டுக்கே வந்து எரிபொருள் செய்யும் திட்டத்தை முதல்முதலில் புனே நகரில் தொடங்குகிறோம். இதற்கு பிஇஎஸ்ஓ நிறுவனம் சான்று அளித்துள்ளது.
முதல்கட்டமாக டீசலும், அதன்பின் பெட்ரோலும் டெலிவரி செய்யப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment