கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Wednesday, March 21, 2018

சிறுநீர் கழிக்க அலட்சியமாக இருக்க வேண்டாமே ?

சிறுநீர் கழிப்பதில் அலட்சியம் காட்ட வேண்டாம்

இதயத்தைப்போலவே ஓயாமல் இயங்கிக்கொண்டிருக்கும் உறுப்பு சிறுநீரகம். இது இயங்குவதை நிறுத்திவிட்டால் அவ்வளவுதான்.

சிறுநீரக பணி

  உடலில் உள்ள கெட்ட நீரை மட்டுமல்ல, தேவைக்கு அதிகமான உப்பு, பல்வேறு நச்சுக்கள், அவசியமற்ற மருந்துக்கூறுகள் போன்றவற்றை வெளியேற்றுவதும் சிறுநீரகங்கள் தான்.

இந்த சிறுநீரகத்தை அதிகம் தாக்கும் பிரச்னைகளில் முக்கியமானது சிறுநீரை அவசியமானபோது வெளியேற்றாமல் இருப்பது தான்.

வெளியிடங்களில் சிறுநீரை கழிக்க வசதியில்லாமல் இருப்பது அல்லது கூச்சப்பட்டுக்கொண்டு போகாமல் இருப்பது ஆபத்தானது. சிறுநீர்ப்பை நிரம்பி இருக்கும்போது கட்டாயமாக சிறுநீரை வெளியேற்றிவிட வேண்டும்.

வெகுநேரமாக சிறுநீர் போகாமல் அடக்கி வைத்திருந்தால், சிறுநீர்ப்பை உள்ள அடிவயிற்றில் கடுமையான வலி உண்டாகும். இது அடிக்கடி தொடர்ந்தால், சிறுநீர்ப்பையில் நோய்த்தொற்றுகள் உண்டாகி சிறுநீரகத்தையே செயலிழக்க வைத்துவிடும்.

No comments:

Post a Comment