இனி கோடையை எப்படி சமாளிக்கலாம்...!
😔 தமிழகத்தில் பல இடங்களில் வெயில் மக்களை வாட்டி வதைக்கிறது. வெயில் காலம் ஆரம்பித்துவிட்ட நிலையில், பலரது உடலும் மிகவும் வெப்பமாக இருக்கும். காலநிலை திடீரென்று மாறும் போது, பலர் கோடைக்காலத்தின் ஆரம்பத்தில் உடல்நலக் குறைவால் அவஸ்தைப்படுவார்கள்.
😰 கோடையை சமாளிக்க நமது உணவு பழக்க வழக்கங்கள் சரியாக, சமச்சீராக இருந்தால் போதும். அதற்கு கோடை காலத்தில் எதை உண்ணலாம், எதைத் தவிர்க்கலாம் என்பதை அறிந்து கொள்வது மிக அவசியம்.
🤑 வெயில் காலங்களில் அடிக்கடி உடலுக்கு ஓய்வு கொடுப்பது அவசியம். அதிகமாக காய்கறிகளையும், பழங்களையும், பானங்களையும் உணவாக கொள்ள வேண்டும். கோடையில் உடலின் தண்ணீர் அளவை சரியான அளவில் பார்த்துக்கொள்வது மிக அவசியம். கோடை காலம் தொடங்கிவிட்டதால் அதிகளவு நீர் பருக வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
வயது வாரியாக யார் யார் எவ்வளவு தண்ணீர் பருக வேண்டும் :
😭 6-10 வயதுக்கு உட்பட்ட வளரும் சிறார் தினமும் ஒன்றரை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
😷 பணியில் ஈடுபடும் 20-30 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் தினமும் 2லி தண்ணீர் குடிப்பது நல்லது.
😨 வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் முதியோர் தினமும் 2லி தண்ணீர் குடிக்க வேண்டும்.
😦நடனக் கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள் ஆகியோர் ஒரு நாளைக்கு 5லி தண்ணீர் வரை குடிக்கலாம்.
😬 உடல் வெப்பத்தை தணிக்க நொறுக்கு தீனிக்கு பதில் நுங்கு, தர்பு+சணி, வெள்ளரிக்காய், திராட்சை, போன்றவைகளை எடுத்துக்கொள்வது நல்லது. பகல் நேரங்களில் இளநீர், மோர் பருகுவதும் நல்ல பலனை அளிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.
😠 கோடையில் தளர்வான பருத்தி ஆடைகளை அணிவது, குழந்தைகளை வெயிலில் இருந்து காக்க குடை பயன்படுத்துவது சிறந்தது. வயதானவர்கள் வெயில் நேரத்தில் வெளியே வருவதைத் தவிர்ப்பது நல்லது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
😵 எலுமிச்சைச் சாறு, சாத்துக்குடி, ஆரஞ்சு, திராட்சைப் பழச்சாறு உள்ளிட்டவற்றை வெயில் காலங்களில் தண்ணீரோடு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், உடல் சுட்டைக் கட்டுப்படுத்தலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
😔 கோடைகாலத்தில் மூன்று வேளையும் வயிறு முட்ட சாப்பிடக்கூடாது. ஐஸ் காபி, ஐஸ் டீ அருந்தக்கூடாது. அதற்கு பதில் இளநீர், மோர், எலுமிச்சை சாறு அருந்துவது நல்லது.
😴மிகுந்த கார உணவுகளையும், கொழுப்பு அதிகமுள்ள உணவு வகைகளையும், எண்ணெயில் வதக்கிய உணவுப் பொருட்களையும் தவிர்ப்பது நல்லது. இவை சருமத்திற்கு தொல்லை தரும். அதுமட்டுமின்றி அஜீரண கோளாறுகளை ஏற்படுத்தும்.
😛அதிகம் தண்ணீர் குடிப்பது, பழங்கள் மற்றும் பழச்சாறுகள் எடுத்து கொள்வது ஆகியவற்றின் மூலம் தோல் பளபளப்பாக இருப்பதுடன், கோடையால் உடலில் உருவாகும் பிரச்சனைகளில் இருந்தும் தப்பிக்கலாம்.
😛அதிக புரோட்டீன் மற்றும் குறைந்த ஹார்போஹைட்ரேட் உள்ள உணவு வகைகளை கோடையில் சாப்பிட வேண்டும்.
No comments:
Post a Comment