கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Saturday, March 3, 2018

ஆங்கில பாடத்தில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி ?

அதிக மதிப்பெண் பெற, ''டிப்ஸ்''

மதிப்பெண் வாரி வழங்கும் வள்ளல்கள், மொழிப்பாடங்கள்; சற்று நன்கு படித்தால் மதிப்பெண் அள்ளலாம், என்கிறார் பெரியநாயக்கன்பாளையம் ஜி.கே.டி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆங்கில பாட ஆசிரியை மகேஸ்வரி.

அவர் கூறியதாவது:

ஆங்கிலத்தை கடினமான பாடம் என கருதாமல், சுலபமானது என நினைத்து படிக்க வேண்டும். மாணவர்களின் கையெழுத்து, விடைத்தாளை திருத்தும் ஆசிரியருக்கு, நல்ல எண்ணத்தை ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும்.

இலக்கண விதிகளை, விரல் நுனியில் வைத்திருக்க வேண்டும். முந்தைய ஆண்டு தேர்வு வினாக்களுக்கான விடை எழுதி, அடிக்கடி பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும். கவிதைப் பகுதியில் விடை அளிக்கும் போது, கவிஞரின் நோக்கம், நயம் பாராட்டுதலை தெளிவாக விளக்குவதோடு, கவிதையின் உட்கருத்து ஆகியவற்றை, புரிந்து எழுத வேண்டும்.

கட்டுரை வினாக்களுக்கு பதில் அளிக்கும்போது, பத்தி, பத்தியாக பிரித்து தெளிவாக பதில் அளிக்க வேண்டும். தகுந்த தலைப்பு, உபதலைப்பு, பொன்மொழிகள், அறிஞர்கள் கூற்று, பாடப்புத்தகத்தில் இருக்கும் முக்கிய வரிகள், எடுத்துக் காட்டுகள் கொண்டு எழுதுவதால், கட்டுரை அழகாக இருக்கும். முக்கிய குறிப்புகளை அடிக்கோடிட்டு காட்ட வேண்டும்.

எழுதி முடித்தவுடன் எழுத்துப் பிழைகளை சரிபார்க்க வேண்டும்.

ஆங்கிலம் இரண்டாம் தாளில், துணைப் பாடத்தை நன்கு படித்துக் கொள்ள வேண்டும். ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு பதில் அளிக்க ஏற்ப, பாடம் படிக்கும் போதே, கேள்வி - பதிலை உருவாக்கி, மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.

வினா - வங்கி புத்தகத்தை கொண்டு, பயிற்சி செய்ய வேண்டும்.சுருக்கி வரைதல் வினாவுக்கு, பதில் அளிக்க கொடுக்கப்பட்டுள்ள பத்திகளை கூர்ந்து படித்து, கருத்தை உள்வாங்கிக் கொள்ள வேண்டும்.

திருந்திய படிவம் எழுதும்போது, தகுந்த தலைப்பிட வேண்டும்.பொதுக்கட்டுரைக்கான பதில் எழுதும்போது, சமுதாய விழிப்புணர்வு கட்டுரைகள், அறிவியல் பயன்பாடுகள், பெண் முன்னேற்றம், சுற்றுப்புற சூழல் பற்றிய கருத்துக்கள் அடங்கிய கட்டுரைகளை, தயார் செய்து கொள்ள வேண்டும்.

பணி விண்ணப்ப கடிதம் எழுதுவது குறித்து, போதுமான பயிற்சி செய்து கொள்ள வேண்டும். பாடத்துக்குப் பின் உள்ள அனைத்து பயிற்சிகளையும், தவறாமல் பயிற்சி செய்து கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment