கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Friday, March 16, 2018

மரங்கள் வளர்ப்போம் மண்ணுலகை காப்போம்

மரங்கள் வளர்ப்போம் இம்மண்ணுலகை காப்போம்
மரங்கள் தரும் நன்மைகள்

1. மரங்களும் அடர்ந்த காடுகளும் மனிதன் சுவாசிக்க உதவும் ஆக்ஸிஜன் என்கிற பிராணவாயுவை உற்பத்தி செய்யும் மையமாகத் திகழ்கின்றன.
2.தூசி, புகை, காற்றில் கலந்திருக்கும் பல்வேறு நச்சுப் பொருட்களை மரத்தின் இலைகள் வடிகட்டி விடுகின்றன.
3 .மழை நீரினாலும், காற்றினாலும் மண்ணரிப்பு ஏற்படுகிறது. இதனால் நம்நாட்டில் ஆண்டுதோறும் பல மில்லியன் டன் அளவுக்கு வளமான மண் அடித்துச் செல்லப்படுகிறது. அவை மேடாகக் குவியவும், ஆற்று நீரோடு அடித்துச் சென்று கடலில் கலக்கவும் நேரிடுகிறது. இதனால் மண்வளம் பாதிக்கப்படுகிறது. இந்நிலையில் மண்வளம் பாதுகாக்க அடர்ந்த மரங்கள் உதவுகின்றன. ஒவ்வொரு மரத்தின் வேரும் மண்ணை இறுகப்பற்றிக் கொள்கிறது.
4.புவி வெப்பமயமாவதற்கு காரணமான பசுமைக்குடில் வாயுக்களில் முதலிடத்தில் இருக்கும் கரியமில வாயுவை உள்கிரகித்து பூமியை மிதமான வெப்ப நிலையில் வைத்திருப்பதில் மரங்களின் பங்கு முக்கியமானது.
5.மரங்கள் பறவைகளின் வாழ்விடங்களாக உள்ளன. பறவைகள் பூச்சிகளை உணவாக உண்பதால் பூச்சி இனங்கள் பெருகாமல் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகின்றன. இவ்வாறு மரங்களால் பல்வேறு நன்மைகள் உள்ள நிலையில் மனிதனின் சுய நலத்துக்காக அவை பெருமளவு அழிக்கப்பட்டு விட்டன. தொடர்ந்து அழிக்கப்பட்டும் வருகின்றன.
மரங்கள் மற்றும் காடுகளை அழிக்காமல் அவற்றை நாம் அனைவரும் காப்போம்.
வரும் தலைமுறைக்கு நல் வாழ்வை கொடுப்போம்

No comments:

Post a Comment