கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Friday, March 16, 2018

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தமிழ் சற்று கடினம்

10-ம் வகுப்பு தமிழ் முதல் தாள் சற்று கடினம்: மாணவர்கள் கவலை

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று பத்தாம் வகுப்பு தேர்வுகள் தொடங்கியது. இந்த தேர்வினை தனித்தேர்வர்கள் உள்பட மொத்தம் 10 லட்சத்து 1,140 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்.

தமிழகம், புதுச்சேரியில் 2017-18-ம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று முதல் ஏப்ரல் 20-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

முதலாவதாக இன்று மொழிப்பாடத்தேர்வு நடைபெற்றது. இன்று எழுதிய மொழிப்பாடத்தேர்வின் முதல் தாள் தேர்வு சற்று கடினமாக இருந்ததாகத் தேர்வெழுதிய மாணவ - மாணவிகள் தெரிவித்துள்ளனர்.

தேர்வில் ஒரு மதிப்பெண் மற்றும் இரண்டு மதிப்பெண் கேள்விகள் வழக்கமாகப் பாடப்புத்தகத்தில் இருக்கும் ஒவ்வொரு பாடத்தின் இறுதியிலும் இருந்து வினாக்கள் கேட்கப்படும்.

ஆனால், இந்தாண்டு அந்த கேள்விப் பட்டியலில் இல்லாது, பாடத்துக்குள் இருந்து சில வினாக்கள் கேட்கப்பட்டிருந்ததால் விடையளிக்க சற்று கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment