கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வருகைக்கு வணக்கம் @ அன்னையர் தினம் நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Monday, March 12, 2018

தன்னம்பிக்கை தத்துவங்கள்

WELCOME

தன்னம்பிக்கை தத்துவங்கள்

 

 

தன்னம்பிக்கை தத்துவங்கள்

 

1

அமைதியாய் இரு  -  ஊமையாய் இராதே!

2

அரிய சாதனைகள் செய்யப்படுவது வலிமையினால் அல்ல; விடாமுயற்சியினால்தான். - ஓவிட். 

3

உன் நேரத்தைப் பாதுகாத்து கொள். அவை தீட்டப்படாத வைரங்கள்.-ரால்ஃப் வல்டோ எமர்சன். 

4

அறிவு என்பது கொல்லன் பட்டறை ஈட்டியைப்போல், அவ்வப்போது தீட்டப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும். 

5

நீங்கள் உண்மையைச் செலுத்தும்போது அதுவே திரும்பக் கிடைக்கிறது.

6

நாம் வாழ்வில் ஒரு வழியைத்தேடி கொண்டிருக்கும்போதே இன்னொரு வழி எளிதாக அமைகிறது

7

எந்த முயற்சியில் நீங்கள் தீவிரமாக ஈடுபடுகிறீர்களோ, ஒரு கட்டத்தில் அதை நீங்கள் அடைகிறீர்கள். 

8

பழக்க வழக்ககங்களே ஒருவனை நல்லவனாகவும், தீயவனாகவும் மாற்றுகின்றன.

9

தன்னுடைய தவறு எது என்பதைக் கண்டுபிடிப்பவன், அறிவுடன் வாழ முதல் படிக்கட்டில் கால் வைத்துவிட்டவன் ஆகிறான்.

10

உலகின் மிகவும் தெய்வீகமானது, சக மனிதரிடம் நீங்கள் காட்டும் அன்பும், பரிவும்தான்