கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Monday, March 12, 2018

தனியார் மெட்ரிக் பள்ளிகளில் கட்டாயம் சிசிடிவி கேமரா

மாணவர்களின் பாதுகாப்பு கருதி தனியார் பள்ளிகளில் சிசிடிவி கேமரா கட்டாயம்

தனியார் மெட்ரிக் பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு கருதி கண்காணிப்பு கேமராக்களை கட்டாயம் பொருத்த மெட்ரிக் பள்ளிகளின் இயக்குனரகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

வேலூரை சேர்ந்த மெட்ரிக் பள்ளி ஆண்டு விளையாட்டு விழாவில் பலூன்களுக்கு நிரப்பப்படும் ஹீலியம் சிலிண்டர் வெடித்து மாணவர் ஒருவர் முகம் சிதறி பலியானார்.

இதையடுத்து மெட்ரிக் பள்ளிகளின் இயக்குனரகம் மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர்களுக்கு அவசர சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.

அதில் கூறியிருப்பதாவது:

கழிவுநீர் தொட்டியில் விழுந்து மாணவர் இறப்பு, பள்ளி விளையாட்டு விழாவின் போது பலூன் காஸ் சிலிண்டர் வெடித்து மாணவர் மரணம் போன்ற சம்பவங்கள் பள்ளி நிர்வாகங்களின் கவனமின்மை, மெத்தனத்தால் நடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. மாணவர்களின் பாதுகாப்புக்கு முழு பொறுப்பும் பள்ளி நிர்வாகங்களை சார்ந்தது.

ஒவ்வொரு பள்ளியிலும் நிர்வாகத்தரப்பில் ஒருவர், பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் மாணவர்கள் அடங்கிய பாதுகாப்புக்குழுவை உடனடியாக அமைக்க வேண்டும்.

பள்ளி வளாகம் முழுமையும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும்.

பள்ளி வளாகத்தில் முட்புதர்கள், கழிவு பொருட்களின் குவியல், கற்குவியல்களை உடனடியாக அகற்ற வேண்டும்.

பள்ளிக்குள் திறந்தவெளி கிணறு இருந்தால் வலிமையான கம்பி வலை கொண்டு மூடவேண்டும்.

பள்ளி கட்டிடங்களின் மொட்டை மாடிகளுக்கான வழிகள் மூடப்பட வேண்டும். மேலும் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிகளும் பாதுகாப்பாக மூடப்பட்டிருக்க வேண்டும்.

மின்சாதனங்கள், மின்இணைப்புகள் பராமரிப்பை அவ்வப்போது மேற்கொள்ள வேண்டும்.

அறிவியல் ஆய்வுக்கூடங்களை ஆசிரியர்களின் மேற்பார்வையில் மட்டுமே திறந்து பயன்படுத்த வேண்டும்.

எல்கேஜி, யுகேஜி குழந்தைகளை ஆயாக்கள் உதவியுடனே கழிவறைக்கு அனுப்ப வேண்டும்.

கழிவறைக்குள் குழாய் வழியாக மட்டுமே தண்ணீர் சப்ளை செய்யப்பட வேண்டும்.

கழிவுநீர் தேக்கத்தொட்டி மூடி பூட்டப்பட்டிருக்க வேண்டும். அதனை சுத்தம் செய்வதை விடுமுறை நாட்களில் மட்டுமே மேற்கொள்ள வேண்டும்.

இதற்கான அமிலங்கள், ரசாயனங்கள் கைக்கு எட்டா இடங்களில் வைக்கப்பட வேண்டும். பள்ளிக்குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வாயு, எரிவாயு உருளை பயன்பாடு, மின்சாதனங்கள் பயன்பாடுபோன்றவை நிகழ்ச்சிகளில் தவிர்க்கப்பட வேண்டும்.

உரிய அலுவலரின் அனுமதியின்றி வெளியிடங்களுக்கு பள்ளிக்குழந்தைகளை அழைத்து செல்லுதல் கூடாது.

அதேபோல் கல்வி நிறுவன வாகனங்களின் பராமரிப்பு, பாதுகாப்பு அம்சங்களில் கவனம் செலுத்துவதுடன், வாகன ஓட்டுனரின் செயல்பாடுகளும் கண்காணிக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment