ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில்
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் ஏழு சுற்றுப் பிரகாரங்கள், 21 கோபுரங்களுடன் கம்பீரமாக காட்சியளிக்கிறது.
14ம் நூற்றாண்டு மற்றும் 17ம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் இக்கோவில் கட்டப்பட்டதாக தல வரலாறு கூறுகிறது.
சேரர்கள், பாண்டியர்கள்,சோழர்கள், ஹோய்சாளர்கள், விஜயநகர மன்னர்கள் ஆகியோரின் ஆட்சியில் இக்கோவில் படிப்படியாக, கட்டப்பட்டதாக கோயில் வரலாறு தெரிவிக்கிறது.
1987ம் ஆண்டு கட்டப்பட்ட கோவிலின் தெற்குப் பகுதியில் ராஜ கோபுரம் கட்டப்பட்டது. இதன் உயரம் 73 மீட்டராகும்.
இந்தியாவிலேயே மிக உயரமான கோபுரம் இதுதான்
இக்கோவிலின் முக்கிய தெய்வம் விஷ்ணு என அழைக்கப்படும் பெருமாள். இருப்பினும் மத வேறுபாடுகளைக் கடந்து இஸ்லாமியர்களும் இக்கோயிலுக்கு அதிக அளவில் வருகின்றனர்.
விஜய நகரப் பேரரரசு வீழ்ச்சியடைந்த பிறகு அதிகளவில் இஸ்லாமியர்கள் இக்கோவிலுக்கு வந்து இறைவனை வழிபட்டதாக வரலாறு உண்டு.
No comments:
Post a Comment