சிறப்பு வாய்ந்த திருச்சி மலைக்கோட்டை
திருச்சியின் அடையாளமாய் திகழ்வது மலைக்கோட்டையாகும்.
பெயர்க்காரணம்
மலைப்பாறை ஒன்றன் மீது கட்டப்பட்ட கோட்டை, கோயில்கள் என்பவற்றைக் கொண்ட ஒரு தொகுதி மலைக்கோட்டை. நடுவில் ஒரு மலையும், அதைச் சுற்றி கோட்டையும் கொண்டு அமைந்துள்ளதால் மலைக்கோட்டை என்று அழைக்கப்படுகிறது.
இது அமைந்துள்ள மலைப்பாறை 273 அடி உயரம் கொண்டது. மாநகரின் மத்தியில் சுமார் 83 மீட்டர் உயரமான இம்மலை அமைந்திருப்பது இயற்கையின் சிறப்பாகும். ஒரு பில்லியன் ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமையானது.
இம்மலைக் கோட்டையில் பல்லவர் காலக் குடைவரைக் கோயில் ஒன்றும், நாயக்கர் காலக் கோட்டை ஒன்றும் உள்ளன. 18ஆம் நூற்றாண்டில், திருச்சி அநேகமாக ஆங்கிலேயரின் ஆளுமையின் கீழ் வந்து விட்டது.
மலைக்கோட்டையின் கதவு முதன்மை அரண் கதவு (Main Guard Gate) எனப்படலானது. இன்றும் அது அப்பெயரிலேயே வழங்கப்படுகிறது. இதனருகிலேயே ராபர்ட் கிளைவ் வாழ்ந்ததாகக் கூறப்படும் இடமும் உள்ளது. மலைக் கோயிலை ஒட்டிய மேற்கு வீதியில் உள்ள தெப்பக்குளத்தின் அருகில் இது உள்ளது.
திருச்சி செல்லும் வாய்ப்பு கிடைத்தால் கண்டு மகிழ்ச்சி அடையுங்கள்.
No comments:
Post a Comment