மொபைல் போனில் வெகு நாட்கள் பேட்டரி நீடிக்க இதோ 10 வழிகள்
1. மொபைல் சார்ஜ் போடும் போது இடையில் நிறுத்தாமல் முழுமையாக சார்ஜ் போடவும்.
2. முழுமையான சார்ஜ் போட்டு முடித்தவுடன் மின் சப்ளையை துண்டிக்கவும். தொடர்ந்து சார்ஜரை மின் இணைப்பில் வைக்க கூடாது.
3. புளூடூத் வசதியை பயன்படுத்திய பின்னர் புளுடூத்தை சுவிட்ச் ஆப் செய்யவும்.
4. WI-FI தேவையில்லாத சமயங்களில் சுவிட்ச் ஆப் செய்யவும்.
5. 3G வசதி இருந்தாலும் GSM Mode-ஐ யூஸ் செய்யவும். 3G/GSM Mode என இரண்டையும் ஒரே நேரத்தில் பயன்படுத்தினால் பேட்டரி சார்ஜ் விரைவில் தீர்ந்து விடும்.
6. மொபைலின் Auto Brightness வசதியை எப்பொதும் ஆப் செய்தே வைக்க வேண்டும்.
7. மொபைல் ரிங் டோன் உடன் சேர்த்தோ அல்லது தேவைப்படாத சமயங்களில் வைப்ரேசன் வசதியை ஆப் செய்யவும்.
8. மொபைல் ஸ்கிரீன் background light நேரத்தை முடிந்த வரை குறைவான நேரத்திற்கு செட் செய்ய வேண்டும்.
9. மொபைல் கேமரா பயன்படுத்தும் போது அதிக நேரம் கடத்தாமல் விரைந்து போட்டோ எடுக்கவும். கேமரா ஆன் செய்து தாமதப்படுத்தினால் சார்ஜ் விரைவில் தீர வாய்ப்பு உண்டு.
10. பின்புலத்தில் ரன் ஆகும் சில அப்ளிகேசன் ப்ரோக்ராம்களை நிறுத்த வேண்டும்.
No comments:
Post a Comment