கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Tuesday, March 6, 2018

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் கதை

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தார் . அவர் உடல் பருமன் அதிக எடையும் உடையவர். அடிக்கடி தின்பண்டம் அதிக அளவில் உண்டு அதிக நேரம் தூங்கும் பழக்கம் உடையவர் . இவர் எடையை குறைக்க எவ்வளவோ வைத்தியம் பார்த்தார். ஆனால் உடல் பருமன் குறைந்த பாடில்லை .அப்போது ஒரு வைத்தியர் ராஜாவின் எடையை குறைக்க முன்வந்தார்.

வைத்தியர் வெளியூர் என்பதால் ஊருக்கு ஒதுக்குப்புறமாக ஒரு குடிசை அமைத்து தங்கி இருந்தார். ராஜாவை குணமாக்குவதற்கு வைத்தியர் சில நிபந்தனைகளை வைத்தார் . அதன்படி ராஜா தன் குடிசைக்கு நடந்து வந்து வைத்தியம் பெற வேண்டும் என்றார்.

ராஜாவும் தன் சேனைகளுடன் நடக்க முடியாமல் நடந்து குடிசையை அடைந்தார். மறுநாளும் இதுபோன்று தொடர்ந்தது. மூன்றாம் நாள் அவர் குடிசையை அடைந்த போது வைத்தியர் வெகு தொலைவில் உள்ள வேறொரு இடத்திற்குச் நடந்து வருமாறு அழைத்தார்.

தினமும் நடந்து நடந்து இராஜாவின் எடை குறைய ஆரம்பித்தது . வைத்தியரின் வைரம் ராஜாவுக்கு புரிந்துவிட்டது. இதற்கு பின் அவர் வைத்தியரிடம் செல்ல வில்லை மாறாக தினமும் காலையில்  நடை பயிற்சியும் அளவாக உண்டு குறைவாக உறங்கும் பழக்கத்தில் தொடர்ந்து மேற்கொண்டார்.

அவரது எடை குறைந்ததும் காரணமாக இராஜியத்தை முழு ஈடுபாட்டுடன் வழிநடத்தினார். நான் உண்ட உணவு வகையான குறிப்பாக ஜங்க் வகை உணவு மட்டும் தின்பண்டங்களினால் தான் அவதிப்பட்ட அனுபவத்தை நேரடியாக நான் பார்த்துவிட்டேன். இப்பொழுது நல்ல ஆரோக்கியமாக இருக்க என் முறையான உணவு பழக்கங்கள் என்றார்.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்னும் பழமொழியில் விளக்கத்தை மக்களுக்கு அவர் விளக்கினார்.

2 comments: