கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Thursday, April 5, 2018

பெற்றோர் கவனத்திற்கு !

பொம்மையில் கிருமிகள்!

குழந்தைகள் குளியலறையில் வைத்து விளையாடும், மஞ்சள் நிற வாத்து போன்ற பொம்மைகளில், ஏராளமான நோய்க் கிருமிகள் இருப்பதாக, சுவிட்சர்லாந்து மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

பயோபிலிம்ஸ் அண்ட் மைக்ரோபியம்ஸ் என்ற இதழில், இரு நாட்டு விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள ஆய்வின்படி, குழந்தைகள் நீரில் வைத்து விளையாடும் நான்கு பொம்மைகளில், மூன்றில், நோய் கிருமிகள் இருக்கின்றன.

குறிப்பாக, பொம்மைகளை தயாரிக்க பயன்படுத்தப்படும் மட்டமான பாலிமர்கள், கிருமிகளுக்கு நல்ல உணவாக அமைவது தான் காரணம் என, ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குளியல் நீரில் கரையும் வியர்வை, அழுக்கு, சிறுநீர் போன்றவையும் கிருமிகள் செழித்து வளர உதவுகின்றன. இந்த பொம்மைகளில், 1 சதுர செ.மீ.,யில், 75 மில்லியன் நுண் கிருமிகள் இருக்கின்றன.

இக்கிருமிகளால், கண், காது மற்றும் வயிற்றில் தொற்று நோய்கள் ஏற்படக்கூடும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

No comments:

Post a Comment