கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Monday, May 14, 2018

சமைக்க சொன்னதால் நடந்த விபரீதம்

''சமையல் செய்யச் சொன்னதால் அண்ணனைக் கொன்றேன்'' - தம்பி பகீர் வாக்குமூலம்



ஹரியானாவில், சமையல் செய்வது யார் என்ற தகராறில், அண்ணனை தம்பியே வெட்டிக் கொன்றுள்ளார். 

சமையல் செய்வது யார் என்ற தகராறு ஒவ்வொரு வீட்டிலும் அடிக்கடி நடப்பதுண்டு. அதுதொடர்பான தகராறு, ஹரியானாவில் குருக்ராம் பகுதியில் நடந்துள்ளது. இந்தத் தகராறில், தம்பியே அண்ணனை வெட்டிக் கொலைசெய்துள்ளார். 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், "சரஸ்வதி என்கிளேவ் பகுதியில் குடியிருந்தவர், ஜெய்சிங். இவரின் தம்பி பல்வந்த் சிங். உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த இவர்கள், ஒரே அறை எடுத்துத் தங்கியிருந்தனர். இருவரும் வெல்டிங் வேலை செய்துவந்தனர். 

இந்த நிலையில் ஜெய்சிங், ரத்த வெள்ளத்தில் வீட்டுக்குள் இறந்துகிடந்த தகவல் கிடைத்ததும், அவரின் சடலத்தைக் கைப்பற்றி விசாரித்தோம். அப்போது, அவரின் தம்பி பல்வந்த் சிங்தான் அண்ணனைக் கொலைசெய்தார் என்பது தெரியவந்தது. 

அவரைப் பிடித்து விசாரித்தோம். விசாரணையின்போது, பல்வந்த் சிங் தெரிவித்த தகவல் எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, அவரைக் கைதுசெய்துள்ளோம்" என்றனர். 

போலீஸாரிடம் பல்வந்த் சிங் கொடுத்த வாக்குமூலத்தில், "என் மூத்த சகோதரர் ஜெய்சிங், வீட்டுக்கு சரியான நேரத்துக்கு வரமாட்டார். இது, எனக்குத் தொந்தரவாக இருந்தது. மேலும், என்னையே சமைக்கச்சொல்லி கட்டாயப்படுத்துவார். 

கடந்த மூன்று நாள்களுக்கு முன், எங்களுக்குள் சண்டைவந்தது. அப்போது, 'நீயே சமையல் செய்துகொள்' என்று அவரிடம் நான் தெரிவித்தேன். அவர் சமைக்க மறுத்ததால் அவரை கொன்றேன்

No comments:

Post a Comment