கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Monday, May 14, 2018

குறைக்கப்படும் அரசு ஆசிரிய பயிற்சி நிறுவனங்கள்

தமிழகம் முழுவதும் உள்ள 20 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூடல்


தமிழகம் முழுவதும் 20 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை மூட அரசு முடிவு செய்துள்ளது. 

தமிழகத்தில் தொடக்க நடுநிலைப்பள்ளிகளில் இடைநிலை ஆசிரியராக பணியாற்ற 2 ஆண்டு ஆசிரியர் பட்டய பயிற்சி தகுதியாக வைக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழ்நாடு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் கட்டுப்பாட்டின் கீழ், தனியார் மற்றும் அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பள்ளி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதால் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் சேரும் ஆர்வம்  குறைந்து வருகிறது. அதற்கேற்ப கடந்த ஆண்டு ஆசிரியர் பட்டய பயிற்சி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையும் பெருமளவில் குறைந்தது. இதனால் மாநிலம் முழுவதும் தனியார் ஆசிரியர் பட்டய பயிற்சி நிறுவனங்கள் பல மூடப்பட்டன. இந்நிலையில் அரசின் சார்பில் மாநிலம் முழுவதும் 32 மாவட்டங்களிலும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிறுவனங்கள் மூலம் ஒவ்வொரு ஆண்டும் 3500 பேர் ஆசிரியர் பட்டய பயிற்சி பெற்று வெளியே வந்தனர்.


மாணவர் சேர்க்கை குறைந்ததை தொடர்ந்து சென்னை, திருவண்ணாமலை, கடலூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, பெரம்பலூர், திருவாரூர், புதுக்கோட்டை, விருதுநகர், தேனி, கோத்தகிரி மற்றும் திருநெல்வேலி ஆகிய 12 இடங்களில் இயங்கி வரும் ஆசிரியர் பட்டய பயிற்சி நிறுவனங்கள் மட்டும் தொடர்ந்து செயல்பட அனுமதிப்பது என்றும், வேலூர், சேலம், திருச்சி உட்பட 20 இடங்களில் உள்ள ஆசிரியர் பட்டய பயிற்சி நிறுவனங்களை மூடுவது என்றும், இதற்காக இந்த ஆண்டு முதல் மாணவர் சேர்க்கையை நிறுத்தவும் அரசு உத்தரவிட்டுள்ளது. 

இதுதொடர்பாக ஆசிரியர் பட்டய பயிற்சி நிறுவனத்தின் ஆசிரியர்களிடம் கேட்டபோது, ‘கடந்த ஆண்டே மாணவர் சேர்க்கை பெருமளவு குறைந்துவிட்டது. இதனால் ஆசிரியர் பட்டய பயிற்சி நிறுவனங்களின் எண்ணிக்கையை குறைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதேநேரத்தில் 12 இடங்களில் தொடர்ந்து செயல்படும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் மாணவர் எண்ணிக்கை உயர்த்தப்படலாம்’ என்று தெரிவித்தனர்.

No comments:

Post a Comment