கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Sunday, May 20, 2018

இனி தபால்தலை சேகரிக்கும் மாணவர்களுக்கு உதவித்தொகை

வரும் கல்வியாண்டு முதல் அரிய வகை தபால் தலை சேகரிப்புக்கு ரூ.8 ஆயிரம் கல்வி உதவித்தொகை : 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்கலாம்



தமிழகத்தில் 2018-19ம் கல்வியாண்டு முதல் 6 முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு அரிய வகை தபால் தலைகளை சேகரித்தால் ரூ.8 ஆயிரம் கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்று தபால்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து தபால்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘மத்திய அரசு சார்பில் தபால்துறை மூலமாக ‘தீன்தயாள் ஸ்பார்ஸ் யோஜனா ஸ்காலர்ஷிப்’ என்ற திட்டத்தின் கீழ் வரும் கல்வியாண்டு முதல் அரிய வகை தபால்தலைகளை சேகரிக்கும் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.

 அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளையும் சேர்ந்த 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்கள் அரிய வகை தபால் தலைகளை சேகரித்து தபால்துறையிடம் ஒப்படைக்க வேண்டும். அத்துடன் மாணவர்களுக்கு பொதுஅறிவு தொடர்பான எழுத்துத் தேர்வும் நடத்தப்படும். 

இதில் தபால் தலைகள் சேகரிக்க 25 மதிப்பெண்கள், பொது அறிவு தேர்வில் 25 மதிப்பெண்கள் என்று 50 மதிப்பெண்கள் வழங்கப்படும். இதில் ஒவ்வொரு வகுப்பிற்கும் சிறந்த 10 மாணவர்கள் வீதம் தேர்ந்தெடுக்கப்பட்டு மொத்தம் 40 மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகையாக தலா ₹8 ஆயிரம் வீதம் வழங்கப்படும். இதற்கான தேர்வு தபால்துறை மூலம் நடத்தப்படும்’ என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment