''100''ல் விளையாடினால் அலைபேசி எண் ரத்து செய்யப்படும்: போலீஸ் எச்சரிக்கை
மதுரை போலீஸ் கன்ட்ரோல் ரூமிற்கு(100) விளையாட்டாக தொடர்ந்து போன் செய்து பொய் தகவல் கூறி அலைக்கழித்தால், சம்பந்தப்பட்டவரின் அலைபேசி எண்ணை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.சட்டம் ஒழுங்கை பாதுகாக்க 24 மணி நேரமும் கன்ட்ரோல் ரூம் இயங்குகிறது.
மதுரையில் 100 ஐ அழைத்தால் சென்னை கன்ட்ரோல் ரூமிற்கு அழைப்பு செல்லும். அங்கு விபரங்களை கேட்டறிந்து சம்பந்தப்பட்ட ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது.
இதில் மேலும் சில புதுமைகள் தொழில்நுட்ப ரீதியாக செயல்படுத்தப்பட்டுள்ளது. அதில் ஒன்று அலைபேசி எண் ரத்து. கன்ட்ரோல் ரூமிற்கு பள்ளியில் குண்டு வைக்கப்பட்டுள்ளது; அந்த இடத்தில் பயங்கர தகராறு என போனில் பீதியை கிளப்புமாறு தெரிவிக்கப்படுகிறது.
பொய் தகவல்களை தொடர்ந்து தெரிவிப்போரின் அலைபேசி எண்ணை கண்டறிந்து, சம்பந்தப்பட்ட அலைபேசி நிறுவனத்திற்கு பரிந்துரைத்து நிரந்தரமாக ரத்து செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. விரைவில் முதல்வர் பழனிசாமி இவ்வசதியை துவக்கவுள்ளார்.
No comments:
Post a Comment