* என்னதான் டென்ஷன் ஆனாலும் குழந்தைகள் மீது பாயமாட்டேன். தவிர்க்க முடியாமல் திட்டினாலும், `சனியனே, எழவு’ போன்ற வார்த்தைகள் சொல்ல மாட்டேன்.
* தெரிந்தவர்கள் வந்தால் குழந்தைகளைத் தனியறைக்குத் துரத்தாமல் இருக்கச் சொல்லி, பேசவைத்து, கூச்சத்தைப் போக்குவேன்.
* குழந்தைக்கு தினம் ஒரு சின்ன கதை அல்லது சம்பவம் சொல்வேன்.
* வீட்டிலேயே அடைந்து கிடக்கும் பெரியவரை மாதம் ஒருமுறை உறவினர் வீடு, பீச், கோயில் எங்காவது அழைத்துப்போவேன்.
* பயனற்ற, காலாவதியான மருந்து, மாத்திரைகளை உடனுக்குடன் ஒழிப்பேன்.
* தினமும் நம்மோடு பழகும் ஒவ்வொரு வரிடமும் உள்ள ஏதாவது ஒரு நல்ல அம்சத்தை வாய்விட்டுப் பாராட்டுவேன்.
* தலைமுறை இடைவெளியில் சிக்காமல் என்னைவிட வயது குறைந்தவர்களுடன் நட்பு ஏற்படுத்திக்கொள்வேன்.
* புதிதாக வரும் கலைஞர்கள் பெயர்களைத் தெரிந்துகொள்வேன். புதுப் பாடல்களையும் தினம் ஒன்றிரண்டு கேட்பேன்.
* தினமும் ஏதாவது ஒரு காய் அல்லது பழம் பச்சையாக சாப்பிடுவேன். உணவில் ஏதேனும் ஒரு கீரை சேர்த்துக்கொள்வேன்.
* அழைப்பிதழ் கொடுத்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாவிட்டாலும் வாழ்த்தாவது அனுப்புவேன்.
* அலுவலகம், திருமணம், விருந்து, சினிமா, நண்பர் வீடு... எங்கு போவதாக இருந்தாலும் நேரம் தவறாமல் செல்வேன்.
* எந்த வேலை என்றாலும் பெண்டிங் வைக்காமல் உடனுக்குடன் முடித்துவிட வேண்டும் என்று அடிக்கடி எனக்கு நானே சொல்லிச் செயல்படுத்துவேன்.
* ஒவ்வொரு நாளும் உறங்கச் செல்வதற்கு முன் அன்றைய செலவுகளை - ஒரு ரூபாய் என்றாலும் - விடாமல், கணக்கெழுதி வைப்பேன். மாதத்தின் கடைசி நாள் அதைப் பிரித்து எழுதி எந்தெந்த செலவுகள் தண்டம் என்று பார்ப்பேன்.
* வாரம் ஐந்து நாளாவது அதிகாலையில் எழுந்து, 45 நிமிடமாவது வாக் போவேன்.
* வார விடுமுறை நாளில் ஆண்/பெண் வேறுபாடு இல்லாமல் குழந்தைகளுக்கு சமையலில் ஈடுபாடு வர உற்சாகப் படுத்துவேன்.
* வாரம் ஒருநாள் வாகனம் ஓட்டமாட்டேன். இயன்ற வரை யாரையும் ஓவர்டேக் பண்ண மாட்டேன். அவசியம் ஏற்பட் டால் தவிர, ஹாரன் அடிக்க மாட்டேன்.
* பொருட்களை எடுத்து பயன்படுத்தியதும், அதற்குரிய இடத்தில் திரும்ப வைப்பேன்.
No comments:
Post a Comment