நடப்பு கல்வி ஆண்டின் 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் முன்கூட்டியே அறிவிப்பு அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார்
நடப்பு கல்வியாண்டின் 10, 11 மற்றும் 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு தேதிகள் மற்றும் தேர்வு முடிவுகள் வெளியாகும் நாட்களை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார்.
சென்னை தலைமைச்செயலகத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், இரண்டு தாள்களாக இருந்த மொழிப்பாடங்கள் ஒரே தாளாக மாற்றப்பட்டுள்ளது. அதனால் மொழிப்பாடங்கள் ஒரே தேர்வாகவே நடைபெறும். 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு 8 தேர்வுகளுக்கு பதிலாக இனி 6 தேர்வுகள் மட்டுமே நடைபெறும்.
நடப்பு கல்வியாண்டில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 1-ம் தேதி துவங்கி மார்ச் 19-ம் தேதி முடிவடையும். 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஏப்ரல் 19-ம் தேதி வெளியிடப்படும்.
11-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 6-ம் தேதி துவங்கி மார்ச் 22-ம் தேதி முடிவடையும். 11-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 8-ம் தேதி வெளியிடப்படும்.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 14-ம் தேதி துவங்கி மார்ச் 29-ம் தேதி முடிவடையும். அதன் முடிவுகள் ஏப்ரல் 29-ம் தேதி வெளியிடப்படும்.
No comments:
Post a Comment