கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Friday, June 22, 2018

திருட்டு போன செல்போனை தானே கண்டறிந்த பட்டதாரி

திருட்டு போன செல்போனை தானே மீட்ட பட்டதாரி போலீசார் போல் துப்பறிந்தவருக்கு பாராட்டு



வடமாநில வாலிபரை கையும், களவுமாக பிடித்து திருட்டு போன செல்போனை தானே பட்டதாரி மீட்டார். போலீசார் போல் துப்பறிந்த அவருக்கு போலீஸ் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.

சென்னை பெரம்பூரை சேர்ந்தவர் சிமியோன் (வயது 24). பட்டதாரியான அவர் மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வருகிறார்.சிமியோன் சமீபத்தில் ஆசையாக விலை உயர்ந்த ஒரு செல்போனை தவணை முறையில் வாங்கினார். அதற்கான தவணையையும் மாதந்தோறும் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் சிம் கார்டு தொடர்பாக புரசைவாக்கத்தில் உள்ள சிம் கார்டு நிறுவனத்துக்கு சிமியோன் 13-ந் தேதி சென்றார். அப்போது அங்குள்ள மேஜையில் செல்போனை வைத்தபடி அங்கிருந்த ஊழியர்களிடம் சிம் கார்டு குறித்து விசாரித்தார்.

சிறிது நேரத்தில் மேஜையில் வைத்த செல்போனை காணாததால் சிமியோன் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அங்கிருந்த ஊழியர்களிடம் கேட்ட போது அவர்கள் எங்களுக்கு தெரியாது என கைவிரித்து விட்டனர்.இதனால் செல்போன் திருடு போனது குறித்து கீழ்ப்பாக்கம் போலீசில் சிமியோன் புகார் செய்தார். 3 நாட்களுக்கு மேல் ஆகியும் போலீசாரிடம் இருந்து எந்தவித நல்ல பதிலும் வரவில்லை. 

இதையடுத்து தானே களம் இறங்கி செல்போனை கண்டுபிடிக்க சிமியோன் முயற்சி மேற்கொண்டார்.இதற்காக தன்னுடைய நண்பரான என்ஜினீயர் ஜாபரின் உதவியை நாடினார். இருவரும் புரசைவாக்கத்தில் உள்ள சிம் கார்டு நிறுவனத்துக்கு மீண்டும் சென்று அங்குள்ள மேலாளரிடம் நடந்த விவரத்தை கூறினர். 

பின்னர் தான் வந்த தேதி, நேரத்தை குறிப்பிட்டு அங்கு பதிவான கண்காணிப்பு கேமரா பதிவுகளை சிமியோன் பார்த்தார்.அதில், தன் அருகே வட மாநில வாலிபர்கள் 2 பேர் நிற்பதையும், அவர்கள் வெளியே செல்லும் போது பதற்றத்துடன் தன்னை திரும்பி பார்த்து சென்றதையும் கண்டார். 

இவர்கள் தான் தன்னுடைய செல்போனை திருடி இருக்க முடியும் என சிமியோன் முடிவுக்கு வந்தார்.அந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை பதிவு செய்ததுடன், வட மாநில வாலிபர்கள் வாங்கிய சிம்கார்டு எண்ணையும் பெற்றுக்கொண்டார். இந்த தகவலையும் போலீசாரிடம் சிமியோன் கொடுத்தார். பின்னர் போலீசார் விசாரணை தாமதமாகலாம் என கருதி தானே செல்போன் திருடியவரை பிடிக்க அவர் முடிவு செய்தார்.

முதலில் தன்னுடைய செல்போனை தொடர்பு கொண்ட போது அதை திருடியவர் ‘சுவிட்ச் ஆப்’ செய்து இருந்தார். இதனால் அவர் வாங்கிய சிம்கார்டு எண்ணுக்கு தொடர்பு கொண்டார். அந்த எண்ணும் ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டு இருந்தது.இதனால் அந்த நபர் முகநூல், வாட்ஸ்-அப் போன்ற சமூக வலைத்தளங்களில் இருக்கிறாரா? என தன் நண்பர் உதவியுடன் ஆய்வு செய்தார். அப்போது அவர் முகநூலில் இருப்பது தெரியவந் தது. அவர் பீகாரை சேர்ந்த பங்கஜ்குமார் (19) என தெரியவந்தது.

 ஆனால் அவர் முகநூலில் அதிகம் செயல்படவில்லை.அடுத்தகட்டமாக அவருடைய நட்பு வட்டாரத்தை தேடினார். அதில் இருந்தவர்களின் செல்போன் எண்களையும் சேகரித்தார். அவர்களை தொடர்பு கொண்டு, பங்கஜ்குமார் வேலைக்காக கேட்டிருந்ததாகவும், அவருடைய செல்போன் எண்ணை தரும்படியும் கேட்டனர். உடனே அவர்கள் பங்கஜ்குமாரின் செல்போன் எண்ணை கொடுத்தனர்.அந்த எண்ணுக்கு பேசிய போது முதலில் மாதவரத்தில் உள்ள ஒரு வீட்டு உபயோக பொருட்கள் கடையில் வேலை பார்ப்பதாக தெரிவித்த பங்கஜ்குமார் திடீரென உஷாராகி செல்போனை ‘சுவிட்ச் ஆப்’ செய்து விட்டார். 

சிறிய தடயம் கிடைத்ததால் மாதவரத்தில் உள்ள வீட்டு உபயோக பொருட்கள் கடைகளை சிமியோன் தேடி அலைந்தார்.அதில் வட மாநில வாலிபர்கள் வேலை செய்யும் கடையை கண்டுபிடித்தார். அந்த கடைக்கு சென்ற போது கண்காணிப்பு கேமராவில் பார்த்த பங்கஜ்குமார் அங்கு இருந்ததை கண்டார். உடனே அவரை பிடித்து கடை உரிமையாளரிடம் விவரத்தை தெரிவித்தார்.

முதலில் மறுத்த பங்கஜ்குமார் பின்னர் செல்போன் திருடியதை ஒப்புக்கொண்டார். அவரிடம் இருந்து தன்னுடைய செல்போனை சிமியோன் மீட்டார். அதை தொடர்ந்து அவரை போலீசில் ஒப்படைத்தார்.போலீசார் போல் சாதுர்யமாக துப்பறிந்து செல்போன் திருடியவரை பிடித்த சிமியோனை போலீஸ் அதிகாரிகள் பாராட்டினர்

No comments:

Post a Comment