நாளும் உற்சாகத்துடன் இன்பமாக வாழலாம் தன்னம்பிக்கை பாடம்
எதற்கெடுத்தாலும் கவலைப்படுபவரா நீங்கள் ? இனி வேண்டாம் கவலை.
என்னடா வாழ்க்கை இது என்று நினைக்காமல் இது என்னுடைய வாழ்க்கை என்று நினையுங்கள். அப்போது உங்கள் மனதில் உருவாகும் எண்ண மாற்றத்தை நீங்கள் அறிவீர்கள்.
இது என்னடா வாழ்க்கை என்று நினைக்கும் போது உங்களுக்கு மனச் சோர்வும் சலிப்பும் அதிகம் உண்டாகும் .இப்போது சொல்லிப்பாருங்கள் என்னடா வாழ்க்கை என்று.
இது என்னுடைய வாழ்க்கை என்று நினைக்கும் போது உங்களுக்குள் உற்சாகமும் பொறுப்பும் வெளிவரத் தொடங்கும் . முன்பை விட உற்சாகமாக ஒருவரை தொடர்ந்து உழைக்க வைக்கிறது . உலக சாதனைகளை நிகழ்த்த வைக்கிறது. ஆகவே உற்சாகத்துடன் இருங்கள்.
சரி எப்பொழுதும் உற்சாகமாக இருப்பது எப்படி என்று பார்ப்போம்.
நடந்ததை நினைத்து அதிகம் கவலை கொள்ளாமல் நடந்தது நடந்ததுதான். நடப்பவை இனி நல்லதாக நடக்கும் என்று நினையுங்கள். நம்பிக்கையுடன் ஒவ்வொரு நிமிடத்தையும் கடந்து செல்லுங்கள்.
நீங்கள் செய்யும் எந்த வேலையாக இருப்பினும் கடமைக்காக செய்யாமல் அவனை கடமையாக செய்து பாருங்கள் .உங்களுக்குள் உற்சாகம் ஊற்றெடுத்து வரும்.
வாழ்க்கை என்பது அவரவர் மனதை சார்ந்தது. நீங்கள் எதனையும் குழந்தை போல அழகாகவும் ஆச்சரியமாகவும் ஒவ்வொரு செயலையும் ரசித்து செய்யுங்கள். உங்கள் வாழ்க்கை மாற வேண்டும் என்றால் முதலில் உங்கள் மனதை மாற்ற வேண்டும்.
கவலைப்படுவதற்கு காரணங்கள் வேண்டுமே தவிர சந்தோஷமாக இருப்பதற்கு காரணங்கள் எதுவும் வேண்டாம் .ஆனந்தமாக இருப்பதற்கு உங்களுடைய மனதை நீங்கள் பக்குவ நிலையில் வைத்திருக்க வேண்டும்.
இவர்கள் இப்படி சொல்லி விடுவார்களோ அவர்கள் அப்படி சொல்லி விடுவார்களோ என்று பயந்து நீங்கள் உங்கள் வேலையை செய்யாமல் விட்டு விடாதீர்கள். முதலில் உங்களுக்கு சரியெனப் படுவதை நீங்கள் செய்யுங்கள்.
போனது போகட்டும் வருவது வரட்டும் எது தேவையோ அதை நான் செய்வேன் தினமும் செய்வேன் என உங்கள் செயல்களை நீங்கள் வழக்கமாக செய்து வாருங்கள்.வெற்றி உங்களை தேடி வரும்.
நாம் உண்ணும் ஒவ்வொரு உணவிலும் மறைந்துள்ள உழவர்களை நினைத்துப் பாருங்கள். அவர்கள் படுகிற கஷ்டங்களை நினைத்தால் நம் கஷ்டம் அதில் மிக மிக குறைவே.
எப்போதெல்லாம் உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் நல்ல புத்தகங்களை வாசியுங்கள். புத்தகங்கள் உங்களை மேலும் புத்தாக்கம் செய்யும்.
வெறுமனே அதனைப் பார்த்தால் வெறும் காகிதம். வெறியுடன் அதனை நீ படித்தால் அதுவே உன் வெற்றியின் ஆயுதம்.
நான் நல்லவனா கெட்டவனா புத்திசாலியா புத்திசாலி அற்றவனா? அறிவாளியா முட்டாளா என்ற போன்ற வினாக்கள் உங்கள் மனதில் தோன்றும் . புத்தகங்களை வாசிக்கும் போது தான் அதற்கான தெளிவு கிடைக்கும் . உங்களிடம் நல்ல உற்சாகம் பிறக்கும்.
மீண்டும் தொடர்வோம்.
No comments:
Post a Comment