வெற்றி தோல்விகளை சமமாக பாவித்தல்
இது ஒரு உண்மை சம்பவம்
ஆபிரகாம் லிங்கன் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஆவார். அமெரிக்காவில் 1809ஆம் ஆண்டு ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர் . நேர்மை பிறரிடம் அன்பு செலுத்துதல் பிறருக்கு உதவுதல் ஆகிய குணாம்சங்களை கொண்டவர்.
தோல்வியின் செல்லக்குழந்தை என்று சொல்லும் அளவிற்கு தொடர்ந்து பல தோல்விகளை சந்தித்த அவர் தனது 25-வது வயதில் இல்லினாய்ஸ் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு அமெரிக்காவின் 16 ஆவது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவர் வாழ்நாள் முழுவதும் ஒரு கைப்பையை எப்போதும் எடுத்துச் செல்வார். ஒரு நாள் அவருடைய நண்பர்கள் இந்த பையில் என்ன உள்ளது என்று கேட்டார்கள். அதற்கு பதில் ஏதும் கூறாமல் தவித்துக் கொண்டே வந்தார் லிங்கன். ஜனாதிபதி பதவியின் இறுதி ஆண்டின் போது அவரின் நெருங்கிய நண்பரும் அதன் ரகசியத்தை கேட்டார்.
வேறு வழியின்றி ஆப்ரகாம் லிங்கன் அதற்கு சொன்ன பதில் நண்பரை மிகவும் திகைக்க வைத்தது.
தன் தந்தை செருப்பு தைத்தல் தொழிலில் பயன்படுத்திய ஊசி தோல் போன்றவற்றை கைப்பையில் வைத்திருந்ததை கூறினார்.
தான் வெற்றி பெற்ற போதும் ஏழ்மையில் வாடிய காலங்களில் மறக்காமல் இருந்த அவரது பண்பானது வெற்றி தோல்விகளை சமமாக பாவிக்கும் எண்ணத்தை வளர்த்து வந்தார்.
வெற்றியும் தோல்வியும் நிலையானது அல்ல மாறி மாறி வருபவை வெற்றியினால் மகிழ்ச்சி இல்லாமலும் தோல்வியினால் மனம் உடையாமல் இருக்க வேண்டும் எனில் அவற்றை நாம் சமமாக பாவிக்கும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ளுதல் வேண்டும்.
கோபம், பொறாமை, வெறித்தனம், மனக்கசப்பு, பயம், தன்னம்பிக்கை இழத்தல் போன்றவற்றில் இருந்து தன்னை காத்துக் கொள்ள வெற்றி தோல்வியை சமமாக கொள்ளுதல் முக்கியம் என்பதை நாம் அறிய வேண்டும்.
No comments:
Post a Comment