கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Wednesday, July 4, 2018

தன்னம்பிக்கை தொடர் 3

எதற்கெடுத்தாலும் எனக்கு நேரம் சரியில்லை என அலுத்துக் கொள்பவர்கள் ஏராளம். மேலும் பலர் செய்ய வேண்டிய வேலைகளை நேரகாலத்தோடு செய்யாமல் விட்டு விட்டு நேரம் சரியில்லை என்று சொல்வதையே வாடிக்கையாக கொண்டுள்ளார்கள். நாம் வாழ்க்கையை எப்படி அணுகுகிறோமோ அப்படி தான் வாழ்க்கை பிரதிபலிக்கும்.  ஏனென்றால் வாழ்க்கை என்பது நம் மனதின் பிரதிபலிப்பு எண்ணங்கள் என்னவோ அதுதான் வாழ்க்கையின் வண்ணங்கள் இருக்கும்.

விதைக்க வேண்டிய பருவத்தில் விதைக்காமல் சோம்பிக் கிடந்து காலம் தவறி விதைத்து விட்டு அறுவடை காலத்தில் எனக்கு நேரம் சரியில்லை. அதனால் தான் எதிர்பார்த்த மகசூல் கிடைக்க வில்லை என்று ஒரு விவசாயி சொன்னால் அது எப்படி இருக்கும்?

உலகத்திலேயே எல்லோருக்கும் சமமான சொத்து ஒன்று உண்டென்றால் அதுதான் நேரம். நேரத்தை சரியான விதத்தில் பயன்படுவது ஒரு கலை . அதாவது நேரத்துக்கு ஏற்ற வேலை , வேலைக்கு ஏற்ற நேரம் என்று கணக்கிட்டு அந்தந்த நேரத்தில் அந்தந்த வேலைகளை செய்தால் போதும் வெற்றி நம்மை தேடி வரும்.

நல்ல பொழுதையெல்லாம் தூங்கி கழித்துவிட்டு அதிர்ஷ்டம் இல்லை என்று அலட்டிக் கொள்வார் என்கிறது திரையிசைப்பாடல். சுறுசுறுப்பானவர்கள் அடுக்கடுக்காக வேலைகள் இருந்தாலும் அடுத்தது என்ன என்று வேலையை தேடி தேடி செய்து வெற்றியின் திசைநோக்கிச் அருகில் இருக்கும் வேலைகளைப் பார்க்கலாம் என நினைத்துக் கொண்டேன் வாழ்நாளை தீர்த்து விடுவார்கள் ஆகவே நேரம் சரியில்லை என்று சொல்லாமல் செய்ய வேண்டிய வேலை எதுவாயினும் அதனை நேரத்தோடு செய்து முடிக்க தொடங்க பிறகு பாருங்கள் உங்கள் நேரம் நல்ல நேரம் ஆகிவிடும்.

 சென்று கொண்டிருப்பவன் தொடர்ந்து வென்று கொண்டிருக்கிறான். நின்று கொண்டிருப்பவர் காலத்தை தின்று கொண்டிருக்கிறான் . காலமும் காற்றும் கடலும் அலையும் யாருக்காகவும் காத்திருக்காது. காலத்தில் பயன்படுத்தினால் காலத்தில் கால் பதிக்கலாம் தன்னை மதிப்பவர்களை காலம் மதிக்கும். தன்னை மதிக்காதவர்களை காலம் மிதிக்கும்.


மறந்தும் சோம்பேறித்தனத்திற்கு மட்டும் இடம் கொடுக்காதீர்கள் . அது ஒரு அரேபிய குதிரை போன்றது. அதற்கு இடம் கொடுத்தால் போதும் அது நம்மை அழித்துவிடும். சுறுசுறுப்பு நெருப்பில் சோம்பலை சாம்பலாக்கி விடுங்கள். தள்ளிப்போடும் எண்ணத்தை முளையிலேயே கிள்ளி போடுங்கள்.

தள்ளி போடுவது என்பது உங்களுடைய வேலைகளை மட்டுமல்ல வெற்றிகளையும் தான் என்பதை உணர்ந்து அதையும் இன்றே முடிப்பேன் , இப்பொழுதே முடிப்பேன் என்ற உற்சாகத்துடனும் வேகத்துடனும் தொடங்குங்கள் வெற்றி விடியல் உங்களுடைய ஒவ்வொரு தினத்திலும் காணலாம்.

எதை செய்தாலும் அதனை கடமைக்குச் செய்யாமல் அதனையே கடவுள் வழிபாடாக நினைத்து உள்ளத்தின் ஈடுபாட்டுடன் செய்யுங்கள். வெறுப்புடன் செய்யாமல் பொறுப்புடன் செய்யுங்கள். காலம் தாழ்த்தாமல் உரிய காலத்தில் செய்யுங்கள் எல்லா நேரமும் நல்ல நேரமே.என்றும் நமக்கு வெற்றி தருமே.

நேரம் போகவில்லை என்பவன் தோல்வியின் திசை நோக்கி செல்கிறான். நேரம் போதவில்லை என்பவனும் வெற்றியின் திசை நோக்கி செல்கிறான். நீங்கள் எப்படி?

நகர்ந்தால் தான் ஆறு அழகாக இருக்கும். மலர்ந்தால் தான் செடி அழகாக இருக்கும்.கனிந்தால் தான் மரம் அழகாக இருக்கும். உழைத்தால் தான் மனிதன் அழகாக இருக்க முடியும். உழைப்பின் வேரில் முயற்சி எனும் நீரை ஊற்றி சோம்பல் என்கிற களை நீக்கினால் வாழ்வில் வெற்றிக் கனி பறிக்கலாம்.

No comments:

Post a Comment