நீங்கள் நினைத்தால் இவருக்கு உதவலாம் - வாருங்கள்
விருதுநகர் மாவட்டம் புதுப்பட்டியைச் சேர்ந்த பூபதிராஜா. தனது 4 வயதில் தந்தையை இழந்த பூபதி, அவரது மாமா கணேசன் தான் ஆதரவாக உள்ளார். தந்தை இறந்தது முதல் பூபதியை கவனித்து வரும் கணேசனுடன் மருத்துவ கவுன்சலிங்காக சென்னைக்கு வந்தார். நீட் தேர்வில் 236 மதிப்பெண்கள் பெற்ற பூபதி ராஜாவுக்கு ராணுவ வாரிசுதாரருக்கான சான்றிதழுடன் கலந்தாய்வுக்கு சென்றபோது பூபதிக்கும் அவரது மாமாவுக்கும் ஏமாற்றமே மிஞ்சியது. ராணுவ வாரிசுதாரருக்கான பட்டியலில் பூபதிராஜாவின் பெயர் இல்லை. இருந்தாலும் நீட் தேர்வில் 236 மதிப்பெண்கள் பெற்ற காரணத்தால் எஸ்.சி பிரிவில் பூபதிராஜாவுக்கு இடம் கிடைக்கும்.
இந்நிலையில் கணேசனுக்கு உடல்நிலை சரியில்லாததால், எழும்பூர் ரயில் நிலையத்தில் ஓய்வு எடுத்த நேரத்தில் சான்றிதழ்களுடனான பையை இருவர் திருடிச் சென்றுள்ளனர்.
தாழ்த்ப்பட்டோர் பிரிவில் இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையிலேயே சென்னை வந்ததாகக் கூறும் கணேசன், சான்றிதழ் பறிபோனதால் செய்வதறியாது உள்ளதாகக் கவலையோடு தெரிவித்துள்ளார்.
திருடுபோன சான்றிதழ்கள் ஜூலை 7ஆம் தேதிக்குள் கிடைத்தால் மருத்துவ படிப்பில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது.
என்னால்தான் இப்படி சான்றிதழ்களை தொலைத்துவிட்டோம் எனக் கதறுகிறார் எந்தக் குற்றமும் செய்திடாத கணேசன். சான்றிதழ்கள் ஏழாம் தேதிக்குள் கிடைத்தால் பூபதி ராஜாவின் மருத்துவர் கனவு நனவாகும். சிறப்புக் கலந்தாய்வு முடிந்துவிட்ட நிலையில் சான்றிதழ்களை இழந்தாலும் நம்பிக்கையை இழக்காமல் மருத்துவர் கனவோடு இருக்கிறார் பூபதிராஜா. களவு போன பையில் எந்தப் பணமும் இல்லை.
பூபதி ராஜாவின் சான்றிதழ்களை யாராவது எடுத்தால் தொடர்புகொள்ள வேண்டிய எண் - 8903802743
ஷேர் செய்யுங்கள் ஒருவரின் எதிர்காலத்திற்காக.
நன்றி
No comments:
Post a Comment