கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Sunday, January 28, 2024

அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்

தெரிந்து மிதித்தாலும் தெரியாமல் மிதித்தாலும்*

*மிதிபட்ட எறும்பிற்கு இரண்டுமே ஒன்றுதான்...!!*
👌👌👌👌👌👌👌

*நினைப்பது போல் வாழ்க்கை எல்லோருக்கும் அமைந்து விடுவதில்லை* 

*அழகாய் அமைந்த வாழ்க்கையைக் கூட சிலருக்கு வாழத் தெரிவதும் இல்லை..!*
👌👌👌👌👌👌👌👌

*'சந்தோஷமா வாழறேன்' னு காட்டிக்கொள்ள தான் பணம் தேவைப்படுகிறது*

*உண்மையில், சந்தோஷமா வாழ பணம் ஒரு பொருட்டே இல்லை*
👌👌👌👌👌👌👌👌

*நோய் வரும் வரை உண்பவன்,*

*உடல் நலமாகும் வரை உண்ணாதிருக்க வேண்டி வரும்!*
👌👌👌👌👌👌👌👌

*பணம் சம்பாதிப்பது குண்டூசியால் பள்ளம் தோண்டுவது போல*

*ஆனால் செலவழிப்பது குண்டூசியால் பலூனை உடைப்பது போல..!*
👌👌👌👌👌👌👌👌

*பணத்தின் மதிப்பு தெரியவேண்டுமா? செலவு செய்யுங்க.....!*

*உங்களின் மதிப்பு தெரியவேண்டுமா?.. கடன் கேளுங்க.!*
👌👌👌👌👌👌👌👌

*பிச்சை போடுவது கூட சுயநலமே...* 

*புண்ணியம் கிடைக்கும் என்று நினைத்ததால்...*
👌👌👌👌👌👌👌👌

*அனுபவத்தால் உணரவேண்டிய ஒன்றை*

*ஆயிரம் தத்துவ ஞானிகளாலும் உணரவைக்க முடியாது.*
👌👌👌👌👌👌👌👌

*வாழ்க்கையில் கற்றுக்கொள்வதில் குழந்தை போல் இரு*
*அதற்கு அவமானம் தெரியாது* 

*விழுந்தவுடன் அழுது முடித்து திரும்பவும் எழுந்து நடக்கும்..!!*
 👌👌👌👌👌👌👌👌

*வெட்டாதீர்கள் - மழை தருவேன் என்கிறது "மரம்".*

*வெட்டுங்கள் - மழை நீரைசேமிப்பேன் என்கிறது "குளம்"*
👌👌👌👌👌👌👌👌

  

*திருமணம் -* 
*ஒரு ஆண் நல்ல கடந்தகாலம் கொண்ட பெண்ணையும்*

*ஒரு பெண் நல்ல எதிர்காலம் கொண்ட ஆணையும் தேடுவது.!!*
👌👌👌👌👌👌👌👌

*முன்னே செல்பவனை விட்டுவிடுங்கள்*

*பின்னால் வருபவனிடம் மட்டும் கொஞ்சம் எச்சரிக்கையாய் இருங்கள்*

*அவனால்தான் உங்களை முந்திச்செல்ல முடியும்.*
👌👌👌👌👌👌👌👌
   

*மீண்டும் ஒரு முறை* *முகம் பார்த்து பேசவேண்டியிருக்கும்*
*என்ற ஒரு காரணத்திற்காகவே*

*நம்முடைய பல கோபங்கள் தற்கொலை செய்துகொள்கின்றன*
👌👌👌👌👌👌👌👌
   

*நேர்மையாக சம்பாதித்த பணம் பெரும்பாலும் கோயில் உண்டியல்களுக்கு வருவதில்லை.*
👌👌👌👌👌👌👌👌
    

*இவ்வுலகில் வாழ கற்றுக் கொண்டதை விட*

*வலிகளை மறைத்து சிரிக்க கற்றுக் கொண்டதே அதிகம்..............!*
👌👌👌👌👌👌👌

*பகலில் தூக்கம் வந்தால்,*
*உடம்பு பலவீனமா இருக்குனு அர்த்தம்..!!*

*இரவு தூக்கம் வரலைனா மனசு பலவீனமா இருக்குனு அர்த்தம்...........!*
👌👌👌👌👌👌👌👌

*துரோகிகளிடம் 'கோபம்' இருக்காது*

*கோபப்படுபவர்களிடம் 'துரோகம்' நிச்சயமாக இருக்காது..*   
👌👌👌👌👌👌👌

*தன்னை நல்லவராக காட்டிக் கொள்ள அடுத்தவரை கெட்டவராகச் சித்தரிக்கும் எவரும் நீண்ட நாள் நல்லவர் வேடத்தில் சுற்ற முடியாது*

Tuesday, October 19, 2021

இந்திய மாநிலங்கள் பற்றிய விக்கிப்பீடியாவின் தொகுப்பு

WELCOME
இந்திய மாநிலங்கள் பற்றிய விக்கிப்பீடியாவின் தொகுப்பு 
மாநிலங்கள் மீது விரல் வைத்தால் மாநிலங்கள் பற்றிய  தகவல் வரும் 





  Download pdf file


                          Download pdf file

Happy Diwali wishes

WELCOME
Happy Diwali wishes



Thursday, February 25, 2021

இன்றைய வரலாற்று தகவல்கள் 5

*இன்றைய வரலாற்று தகவல்*

எலிஜா இம்பே(Elijah Impey)

*இவர் 1732 ஜூன் 13ஆம் தேதி லண்டனில் பிறந்தார்
    * தனது பள்ளி வாழ்க்கை வாரன் ஹேஸ்டிங்ஸ் உடன் பயின்றார்.
* இந்தியாவில் வில்லியம் கோட்டையின் முதலாவது உச்ச நீதிமன்ற நீதிபதி ஆவார்
* திவானி அதாலத்தின் முதல்நீதிபதியாக பதவியேற்றுக்கொண்டார்.
* வாரன் ஹேஸ்டிங்ஸ் தலைமை நீதிபதியை திவானி அதாலத்தின் தலைவராக்கி அவருக்கு கூடுதலான ஊதியம் கொடுக்கப்பட்டது
* தலைமை நீதிபதியை நாட்டின் எல்லா நீதிமன்றங்களுக்கும் தலைவராக்கினார்
* நீதிபதி கையூட்டு பெற்றார் என்று அனைவரும்இகழ்ந்தனர்.
* இதனை அறிந்த இங்கிலாந்து மன்னர் நீதிபதியை திரும்ப அழைத்துக் கொண்டது.
* வணிகக் குழுவின் ஊதியத்தையும் அவருக்கு அளித்த பதவியும் ஏற்றுக்கொண்ட குற்றத்திற்காக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.
* நேரடியாக மன்னரால் நியமிக்கபட்டு மன்னரால் ஊதியம் பெறும் எலிஜா இம்பே அரச துரோகம் செய்தார் என்று கூறி விசாரணை நடத்தினர்.
*  ஒழுங்குமுறை சட்டத்தை ஒழுங்குபடுத்த 1781 இல் சீர்திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டது.
* ஒழுங்குமுறை சட்டத்தின் பல குறைபாடுகளை இச்சட்டம் நீக்கியது
* நீதிபதிகள்அதிகார வரம்பு வரையறுக்கப்பட்டது.
* எலிஜா இம்பே 1809 ஆம் ஆண்டு இறந்தார்


இன்றைய வரலாற்று தகவல்கள் 4

*இன்றைய வரலாற்று தகவல்*

*காரன்வாலிஸ்(Cornwallis)*
* லண்டனில் க்ரோஸ்வென்  சதுக்கம் என்ற இடத்தில் 1738 ல்பிறந்தார்  
* கேம்பிரிட்ஜ் மற்றும் ஏடன் பல்கலைக்கழகத்தில் பயின்றவர்
*1757 ஆம் ஆண்டு ஆங்கிலேயப் படையில் சேர்ந்தார்
*1760 ஆம் ஆண்டு இங்கிலாந்து பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்
*1775 ராணுவ தளபதி ஆனார்
* அமெரிக்கப் புரட்சியின்போது சர் ஹென்றி கிளிண்டனின் கீழ் பணியாற்றியவர்
*1786 ஆம் ஆண்டு இந்தியாவில் கவர்னர் ஜெனரல் மற்றும் ராணுவ கமாண்டராக பதவி ஏற்றார்
* இங்கிலாந்து பிரதமர் இளைய பிட் அவர்களும் மேற்பார்வை தலைவர் தண்டாஸ் அவர்களும் இவரது நெருங்கிய நண்பர்கள்
*1793 ஆம் ஆண்டு சர் ஜார்ஜ் பார்லோ எனும் சட்டவல்லுனர் உதவியுடன் சட்டத் தொகுப்பை தயாரித்தார்
* இத்தொகுப்பில் ஆட்சிமுறை. முறை வழங்குமுறை. காவல் முறை. வாணிகம் நீதி ஆகியவற்றின் அடங்கும்.
* வருவாய் துறை அதிகார துறையிலிருந்து பிரிக்கப்பட்டது
* ஏழாண்டு போர். அமெரிக்க விடுதலைப் போர். மூன்றாம் மைசூர் போர் ஆகியவற்றில் பங்கு கொண்டவர்
*1805 ஆம் ஆண்டு காசிப்பூரில்  இறந்தார்.

இன்றைய வரலாற்று தகவல்கள் 3

*இன்றைய வரலாற்று தகவல்*
*நிலையான நிலவரி திட்டம்1793*
* ராபர்ட் கிளைவ் வங்காள நவாப்பிடமிருந்து  வங்காளம். பீகார் ஒரிசா ஆகிய மாகாணங்களில் வரி தண்டல் உரிமையை( திவானி) பெற்றிருந்தார்.
* இம்முறையில் நிலங்களை ஏலம் விடும் முறை நடைமுறையில் கொண்டு வந்தார். இம்முறை ஆண்டுதோறும் நடைபெற்று வந்தது.
* வாரன் ஹேஸ்டிங்ஸ் ஐந்து வருடத்துக்கு ஒரு முறை ஏலம் விடும் முறையைக் கொண்டு வந்து தோல்வி அடைந்தார்.
* வறட்சி. பிளேக் நோய். வாந்தி பேதி போன்ற காரணங்களால் விவசாயி வரி செலுத்த முடியவில்லை எனவே அரசுக்கு நிரந்தர வருவாய் கிடைக்கவில்லை.
* இதனால் அரசுக்கு நிரந்தர வருவாய் பெறும் பொருட்டு காரன்வாலிஸ் பிரபு நிலையான நிலவரி திட்டத்தை கொண்டு வந்தார்.
* வங்காளத்தின் வருவாயை அதிகப்படுத்த வேண்டும் என்று பிட் இந்திய சட்டம் வலியுறுத்தியது.
* சோதனைக்காக காரன்வாலிஸ் பிரபு முதல் 10 ஆண்டு காலத்திற்கு நிலையான நிலவரிதிட்டத்தை கொண்டு வந்தார்.
* இத்திட்டத்தை வகுப்பதில் அவருக்கு உதவியவர்கள் ஜேம்ஸ் கிராண்ட். ஜொனதன்பங்கன்.ஷோர் ஆகியோர் முக்கிய பங்கு வகித்தனர்.
* இதனால் ஆண்டுதோறும் ஏலம் விடும் முறை அகன்றது.
* இத்திட்டம்1770 ஆம் ஆண்டு வங்கப் பஞ்சம் முடிவதற்குள் கொண்டு வரப்பட்டதால் விவசாயிகள் பாதிப்படைகின்றனர்
* இத்திட்டத்தால் ஜமீன்தார் குடும்பங்கள் பாதிப்படைந்தன குறிப்பாக தினா பூர் ராஜா. பிஸ்னாப்பூர் ராஜா.நுதியாராஜா.கோசிகர் ராஜா குடும்பங்கள் பாதிப்படைந்தன.


இன்றைய வரலாற்று தகவல்கள் 2

*இன்றைய வரலாற்று தகவல்*

*சர் வில்லியம் ஜோன்ஸ்(1746-1794)*
🌺1746செப்28இல் westminster London பிறந்தார்.
🌺 தந்தை -வில்லியம்
🌺தாய்-மேரிநிக்ஸ்ஜோன்ஸ்
🌺வங்காளத்திற்கு நீதிபதியாக வந்த ஜோன்ஸ் அப்போது நடைமுறையில் இருந்த சர் எலிஜா இம்பேயின் சட்டமுறைகளை மாற்றி அமைத்தார்.
🌺சிவில் வழக்குகளில் மதத்திற்கு ஏற்றபடி நீதி வழங்க முக்கிய காரணமாக இருந்தவர்.
🌺வாரிசுரிமை. திருமணம் போன்றவை இந்து முஸ்லிம் சட்டங்களின்படி தீர்ப்பு கூறப்பட்டன.
 🌺கடந்தகால வரலாற்றை ஆய்வு செய்வதில் ஆர்வம் கொண்ட ஜோன்ஸ்
*Asiatic society* என்ற அமைப்பை வங்காளத்தில் நிறுவினார்.
🌺இதன் நோக்கம் இந்தியாவின் மொழி. வானவியல் சாஸ்திரம். அறிவியல். மருத்துவம். நீதி. வரலாறு. புவியியல். விவசாயம். இசை. கட்டிடக்கலை பற்றிய ஆராய்ச்சி செய்து கட்டுரைகளை வெளியிடுவதே நோக்கம்.
 🌺எனவே அக்காலத்தில் கிடைக்கப்பட்ட வரலாற்றுச் சான்றுகளின் படி1789இல் செய்திகள் தொகுக்கப்பட்டு கட்டுரையாக வெளியிடப்பட்டன.
🌺காளிதாசர் எழுதிய சாகுந்தலம் என்ற நூல் சமஸ்கிருதத்திலிருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். ரிது சம்ஹாரம் என்ற நூலும் மொழிபெயர்த்தார்
🌺Asiatic societyபின்
The Asiatic society
The Asiatic society of Bengal
The RoyalAsiatic society of Bengalஎன்று மாறியது
🌺பதினோரு ஆண்டுகள் இந்தியாவில் தங்கி இருந்த அவர் இந்தியாவின் வரலாற்றை ஆய்வு செய்ய உறுதுணையாக இருந்தார். இந்த அமைப்பில் இருந்தஜேம்ஸ்பிரின்ஸ்ப் போன்றோர் பிற்காலத்தில் வரலாற்றை ஆய்வு செய்ததில் முக்கிய பங்காற்றினர்.
🌺1794 இறந்தார்.