கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Friday, April 15, 2016

தமிழ் முக்கிய வினாக்கள் பகுதி 2

பெயர்

தொன்றுதொட்டு காரணம் எதுவும் இன்றி வரும் பெயருக்கு  இடுகுறிப் பெயர் என்று அர்த்தம்.
அதற்கு உதாரணம் : கல், கலம், கன்னல்

ஒரு காரணம் பற்றியோ அல்லது பல காரணங்கள் பற்றியோ வழங்கி வரும் பெயருக்குக் காரணப் பெயர் என்று அர்த்தம்.
உதாரணம் : முக்காலி (மூன்று கால்), பறவை (பறத்தல்)

மாத்திரை

எழுத்துக்களின் ஒலி அளவு குறித்ததே மாத்திரையாகும். கண் இமைக்கும் நேரம் அல்லது கைநொடி நேரமே மாத்திரை ஆகும்.
குறில் எழுத்துக்கு 1 மாத்திரை அளவு
நெடில் எழுத்துக்கு 2 மாத்திரை அளவு
மெய் எழுத்துகள், சார்பெழுத்துகள் – அரை மாத்திரை அளவு
மகரக் குறுக்க எழுத்துகளுக்கு கால் மாத்திரை அளவு

குற்றியலிகரம், குற்றியலுகரம் எழுத்துகளுக்கு கால் மாத்திரை அளவு
ஆய்த எழுத்துகளுக்கு – கால் மாத்திரை அளவு
ஐகார எழுத்துக்கு – 1 மாத்திரை அளவு
எழுத்துக்களில் இண்டு மாத்திரைக்கு மேல் இல்லை.

அவ்வாறு இருப்பின் அது அளபெடையாகச் செய்யுளில் வரும்.

அளபெடை

அளபடை என்பது : அ, இ, உ, ஆகிய உயிர் எழுத்துகள் வார்த்தைகளின் நடுவிலும், கடைசியிலும் வருவதில்லை. அவ்வாறு வரின் அதுவே அளபெடையாகும்.
அளவு + எடை = அளவைக் காட்டிலும் மிக்கு ஒலித்தல்.

அளபெடை இரு வகைப்படும்.

அவை – உயிர் அளபெடை, ஒற்றளபெடை

உயிர் அளபெடை 
மூன்று வகைப்படும்.
அவை செய்யுளிசை அளபெடை, இன்னிசை அளபெடை, சொல்லிசை அளபெடை .

No comments:

Post a Comment