கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Friday, April 15, 2016

தமிழ் முக்கிய இலக்கணங்கள்

திணை

உயர்ந்த குலமும், சிறந்த ஒழுக்கமும், பகுத்தறிவும் படைத்த இனப்பொருட்களை உயர்திணைஎன்பர்.
உயிருள்ள பொருட்களையும், உயிர் இல்லாப் பொருட்களையும் அஃறிணை எனக் கூறுவர்.
இரு திணைகளிலும் அடங்கிய உலகத்துப் பொருட்களை ஐம்பால்களாகப் பிரிக்கலாம்.

பால்
பால் என்பதற்கு பகுப்பு எனப் பொருளுண்டு.
பால் ஐந்து வகைப்படும்,

அவை ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால்.

உயர்திணைக்கு உரிய பால்கள் : ஆண்பால், பெண்பால், பலர்பால்

அஃறிணைக்கு உரிய பால்கள் : ஒன்றன்பால், பலவின்பால்

இலக்கண வகை

தமிழ் இலக்கணம் ஐந்து வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
அவை : எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி

தமிழில் முதலெழுத்து என்பது உயிரெழுத்து, மெய்யெழுத்து என இருவகைப்படும்.

சுட்டெழுத்து

ஒன்றினை சுட்டிக் காட்ட வரும் எழுத்திற்குச் சுட்டெழுத்து என்று பெயர்.

சொற்களின் உள்ளே சுட்டெழுத்து அடங்கி வந்தால் அது அகச்சுட்டு.
சொற்களுக்கு வெளியே சுட்டெழுத்து நிற்குமாயின் அது புறச்சுட்டு.

வினா

வினாப் பொருளைக் காட்ட வருகின்ற எழுத்துக்கு வினாவெழுத்து என்று பெயர்.

சொற்களின் உள்ளேயே வினாவெழுத்து அமைந்து வந்தால் அது அகவினா எனப்படும்.
சொற்களின் வெளியே வினாவெழுத்து அமைந்தால் அது புறவினா எனப்படும்.

எழுத்து

வல்லினம் – க, ச,ட, த, ப, ற  மெல்லினம் – ங, ஞ, ண, ந, ம, ன இடையினம் – ய, ர, ல, வ, ழ, ள

மொழி முதல் எழுத்துக்கள் –
க, ச, த, ந, ப, ம, வ, ய, ஞ, ங

மொழி முதலில வரக்கூடாத எழுத்துக்கள் –
ட, ண, ர, ல, ழ, ள, ற, ன

மொழி இறுதி எழுத்துக்கள் – ஞ், ண், ந், ம், ன், ய், ர், ல், வ், ழ், ள்

இறுதியில் வரக் கூடாத எழுத்துக்கள் ஏழு.
அவை – க், ங், ச், ட், த், ப், ற்

ஒரு சொல் உயிரெழுத்தில் துவங்கி, உயிரெழுத்தில் முடியும்.
மெய்யெழுத்தில் தொடங்காது, ஆனால் மெய்யெழுத்தில் முடியும்.
உயிர்மெய்யெழுத்தில் தொடங்கும், ஆனால் உயிர்மெய்யில் முடியாது.

மெய்யெழுத்தில் க், ச், த், ப் என்னும் நான்கும் தம்முடன் தாமே மயங்கும் எழுத்துக்களாகும்.

போலி

போல இருத்தல் என்பதே போலி.
இது முதற்போலி, இடைப்போலி, கடைப்போலி என மூன்று வகைப்படும்.

சொல்லின் முதலில் இருக்க வேண்டிய எழுத்துக்கு மாறாக வேறு ஒரு எழுத்து இருந்தால் அது முதற்போலி.

சொல்லின் இடையில் இருக்க வேண்டிய எழுத்துக்கு மாறாக வேறு ஒரு எழுத்து இருந்தால் அது இடைப்போலி.

கடைசியில் வந்தால் கடைப்போலி

No comments:

Post a Comment