கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Friday, April 15, 2016

தமிழ்த் தேர்வுக்கு சிறந்த வினாக்கள்

*காரைக்கால் அம்மையார் அந்தாதித் தொடையில் பாடியுள்ள பாடல்கள்

அற்புதத் திருவந்தாதி, திருவிரட்டை மணி மாலை

* காரைக்கால் அம்மையாரின் பாடல்கள் சேர்க்கப்பட்டுள்ள திருமுறை

பதினோராம் திருமுறை

* மணிமேகலையின் அமுதசுரபியில் முதன் முதலில் சோறிட்டவர்

ஆதிரை

* மணிமேகலையில் உள்ள காதைகள்

30 காதைகள்

* மணிமேகலைக்கு உதவிய பெளத்தமதத் துறவி

அறவண அடிகள்

* மணிமேகலை நூல் அமைந்துள்ள பா

அகவற்பா

* மணிமேகலை பெரிதும் வலியுறுத்துவது

பசிப்பிணி நீக்கம்

* தென்னவன் பிரமராயன் என்ற விருது பெற்ற நாயன்மார்

மாணிக்கவாசகர்

* திருத்தொண்டத் தொகையை எழுதியவர்

மாணிக்கவாசகர்

* வளையாபதி எந்தச் சமயத்தைச் சார்ந்த நூல்

சமண சமயம்

* தருமசேனர் என்று அழைக்கப்பட்டவர்

அப்பர்

* ”வடமேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ் கூறு நல்லுலகம்” எனத் தமிழ்நாட்டின் எல்லையைக் குறிப்பிடுபவர்

பனம்பாரனார்

* ”கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே, வானொடு முன்தோன்றி மூத்தகுடி” எனும் தொடர் அமைந்துள்ள பாடல்

புறப்பொருள் வெண்பாமாலை

* ”இவள் என்று பிறந்தவள்” என்றறியாத இயல்பினலாம் எங்கள்தாய்” என்று தமிழின் தொன்மையைக் குறிப்பவர்

பாரதியார்.

* ”விண் இயங்கும் ஞாயிற்றைக் கை மறைப் பாரில்” இவ்வடி இடம்பெறும் நூல்

கார் நாற்பது.

* திருமாலின் பாஞ்சசன்யம் என்னும் சங்கின் அவதாரமாகக் கருதப் பெறுபவர்

பொய்கையாழ்வார்

* மொழி என்பது

கருத்துக்களின் பரிமாற்றம்

* தமிழ்மொழி வழங்கிய பகுதியின் வட எல்லை, தென் எல்லைகளாக அமைந்தவை

வடவேங்கடம் முதல் தென் குமரி வரை

* பண்பட்ட திராவிட மொழிகளில் தொன்மையானது
தமிழ்

* பத்துப்பாட்டு நூலில் மிகவும் பெரிய நூல்

மதுரைக் காஞ்சி

* பொருநராற்றுப்படையைப் பாடியவர்

முடத்தாமக் கண்ணியார்.

* மலைபடுகடாம் என்னும் இலக்கியம்

கூத்தாற்றுப்படை

* முல்லைப்பாட்டைப் பாடியவர்
நப்பூதனார்.

* தமிழ் நிலைபெற்ற மதுரை எனக்கூறும் நூல்

சிறுபாணாற்றுப்படை

* உலா நூல்களுள் மிகப் பழமையைனது

திருக்கைலாய ஞான உலா

* தூது இலக்கியத்திற்குரிய யாப்பு

கலிவெண்பா

* கலிங்கத்துப் பரணி பாட்டுடைத்தலைவன்

குலோத்துங்கன்

* ஆண்பால் பிள்ளைத் தமிழின் இறுதி நான்கு பருவங்கள்

அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர்

No comments:

Post a Comment