கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Friday, May 20, 2016

பூமியை அறிவோம்

100 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமி எப்படி இருந்தது:

எதிர்காலத்தில் எப்படி இருக்கும்:

சுமார் 4.54 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் சூரிய ஒண்மீன் படலத்திலிருந்து பிரிந்து அடர்வளர்ச்சியின் பயனாக உருவானது.

தொடக்கத்தில் எரிமலை வாயுவால் காற்று மண்டலம் உருவானது, ஆனால் அதில் உயிர்வாழத்தேவையான பிராணவாயு இல்லாமல் நச்சு வாயுக்களைக் கொண்டதாகயிருந்தது.

பெரும் எரிமலைச் சிதறலாலும், பிற அண்டவெளிப் பொருளில் மோதிக்கொண்டேயிருந்ததாலும் புவியின் பெரும்பகுதி உருகிய நிலையிலேயே உள்ளது. அத்தகைய மோதல்களின் விளைவால்தான் சந்திரன் உருவானதாகவும், புவி சற்று சாய்ந்த நிலையில் மாறியதாகவும் கருதப்படுகிறது.
பல காலங்கள் புவி குளிர்ச்சியடைந்து திடநிலையானது.

புவியில் மோதிய வால்நட்சித்தரங்கள் மற்றும் சிறுகோள்கள் மூலமாக மேகங்கள் உருவாகி பெருங்கடல்கள் உருவாகின. அதன்பின்னரே உயிர்கள் வாழ தகுந்த சூழல் உருவானது.

அடுத்து பிராணவாயுவும் அதிகரிக்கத் தொடங்கியது. வெறும் நுண்ணுயிர்கள் மற்றும் மிகச்சிறிய உயிர்கள் மட்டும் ஒரு பில்லியன் ஆண்டுகள் வரை புவியில் இருந்துள்ளன.

580 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் பலசெல் உயிரினங்கள் தோன்றி கேம்பிரியக் காலத்தில் முக்கிய பெருந்தொகுதிகள் பரிணாமித்தன.

6 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்  தான் மனித இனத்தின் நெருங்கிய சிம்பன்சிகள் தோன்றின அதிலிருந்து மனிதக் கூர்ப்புகள் பிரிந்து தற்கால நவீன மனிதர்கள் உருவானார்கள்.

பூமியில் உள்ள தற்போது நிலப்பரப்பு ஆரம்பத்தில் கிடையாது. உலகம் வாழ்வதற்கான நிலையையும் தகுதியையும் பெற்ற நாள் முதல் தான் பூமியில் உயிரினம் தோன்ற ஆரம்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர் அடி தட்டுகள் இடம் பெயர்ந்தது மூலம் கண்டங்கள் என்று நம்மால் அழைக்கப்படும் நிலப்பரப்பு உருவானது. 

நன்றி : தினத்தந்தி

No comments:

Post a Comment