கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Wednesday, May 25, 2016

எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவு இன்று வெளிீயீடு

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு இன்று வெளியீடு

சென்னை,எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கடந்த மார்ச் மாதம் 15–ந் தேதி தொடங்கி ஏப்ரல் 13–ந் தேதி முடிவடைந்தது.

இந்த தேர்வுக்கான விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டு, மதிப்பெண்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணியும் முடிவடைந்தது.

இதைத்தொடர்ந்து தேர்வு முடிவு இன்று (புதன்கிழமை) காலை 9.31 மணிக்கு வெளியிடப்படுகிறது.

முடிவை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தில் அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி வெளியிடுகிறார்.

அதே நேரத்தில் அனைத்து பள்ளிகளிலும் தேர்வு முடிவு மற்றும் மதிப்பெண்களை தெரிந்து கொள்ளலாம்.தேர்வு முடிவை மாணவ–மாணவிகள் கீழ் கண்ட இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்.

அந்த இணையதளங்கள் விவரம் வருமாறு:–

www.tnresults.nic.in

www.dge1.tn.nic.in

www.dge2.tn.nic.in

No comments:

Post a Comment