கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Sunday, July 16, 2017

பி.எட் படிக்க கட் ஆப் வெளியீடு

அரசு, உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் பி.எட். படிப்புக்கு கட்-ஆஃப் மதிப்பெண் வெளியீடு

கலந்தாய்வு நாளை தொடங்குகிறது அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிக ளில் பி.எட். மாணவர் சேர்க் கைக்கான கட்-ஆஃப் மதிப் பெண் இணையதளத்தில் வெளி யிடப்பட்டுள்ளது.

கல்லூரியை தேர்வுசெய்வதற்கான கலந்தாய்வு நாளை (திங்கள்கிழமை) தொடங்கு கிறது.

தமிழகத்தில் 7 அரசு கல்வியி யல் கல்லூரிகளும், 14 அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரி களும் உள்ளன. இக்கல்லூரிகளில் வழங்கப்படும் பி.எட். படிப்பில் 1,753 இடங்கள் ஒற்றைச்சாளர முறையில் (சிங்கில் விண்டோ சிஸ்டம்) கலந்தாய்வு மூலமாக நிரப்பப்படுகின்றன.

நடப்பு கல்வி ஆண்டில் (2017-18) மேற்குறிப்பிட்ட அரசு ஒதுக் கீட்டு பி.எட். இடங்களில் சேர 5,733 பேர் விண்ணப்பித்தனர். அவர்களின் விண்ணப்பங்கள் பரி சீலிக்கப்பட்டு கலந்தாய்வுக்கான கட்-ஆஃப் மதிப்பெண் நேற்று வெளியிடப்பட்டது.

இதுதொடர்பாக கலந்தாய்வை நடத்தவுள்ள சென்னை லேடி வெலிங்டன் கல்வி யியல் மேம்பாட்டு நிறுவனத்தின் முதல்வரும், தமிழ்நாடு பி.எட். மாணவர் சேர்க்கை செயலாள ருமான பேராசிரியர் எஸ்.கலைச் செல்வன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

பி.எட். சேர்க்கைக்கான கட்-ஆஃப் மதிப்பெண், பாடப் பிரிவு மற்றும் இடஒதுக்கீட்டுப் பிரிவு வாரியாக www.ladywillingdoniase.com என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

கலந் தாய்வு, ஜூலை 17-ம் தேதி (திங்கள் கிழமை) தொடங்கி ஜூலை 22-ம் தேதி முடிவடையும். கலந்தாய்வு கால அட்டவணையை இணைய தளத்தில் பார்த்துக் கொள்ளலாம். கலந்தாய்வுக்கான அழைப்புக் கடிதம் விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

உரிய கட்-ஆஃப் மதிப்பெண் இருந்தும், அழைப்புக்கடிதம் கிடைக்கப் பெற வில்லை என்றால் குறிப்பிட்ட நாளில் கலந்தாய்வில் தேவை யான சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளலாம். கலந்தாய்வுக்கு வருவோர் அனைத்து சான்றிதழ்கள், அவற் றின் நகல்கள், கலந்தாய்வுக் கட்டணமாக ரூ.2000-க்கான டிமாண்ட் டிராப்ட் (“The Secretary, Tamilnadu B.Ed. Admission 2017-18” என்ற பெயரில்) ஆகியவற் றைக் கொண்டுவர வேண்டும். எஸ்சி, எஸ்டி வகுப்பினர் எனில் ரூ.1,000-க்கு டி.டி. எடுக்க வேண் டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment